Saturday, September 1, 2012

இலையில் தங்கிய துளிகள்

கால பெருவெளியில் சில பத்துஆண்டுகள்


கரைந்து கழிந்த பின் மீண்டும்

கண்டு செல்ல வருகிறேன் உன்

காதல் திருமுகத்தை



அவ்வண்ணமே பொழியுமாம் பூ

மலிந்த பொன்முகம்

உன் கிராமம் நெருங்க நெருங்க

மார்பு கூட்டில் உயிர் நோகுதடி



நகரா மரங்கள் நகர்வதாகவும்

நகரும் வாகனம் நிலைகொண்டதாகவும்

நீள போய் சொல்கிறது நெடுஞ்சாலை

கலாபம் கட்டி ஆடுகின்றன நிறைவேறாத கனவுகள்!!



பட்டு பாவாடையின் காற்றடிப்போடு

பணிவில் திமிர் காட்டும் பார்வைகளோடு

முளைத்தும் முளையா முன்மலர்களை

சண்டையிட்டு முட்டும் சடை ஒதுக்கி,

சலங்கை கட்டிய மான்குட்டியாய்

கலர் தோயாத கலை மேகமாய்

வீதிமரங்களின் பூக்களை திறந்து

ஒட்டுமொத்த நாணத்தை உருண்டை திரட்டி

என்மேல் எறிந்து நீ என்னை கடந்த காலம்

மனசெல்லாம் மார்கழி தான்

தெருவெல்லாம் கார்த்திகை தான்!



ஏலோ எட்டோ இருக்குமா! பழகி

வந்த ஆண்டுகளும் பகிர்ந்து கொண்ட

வார்த்தைகளும்!இன்றேனும் பேசு பெண்ணே

வாங்க !!!!

ஆண்டுகள் தோண்டிய அதே குரல்!

ஆனால் நீ மட்டும் நீ இல்லை :((

வீதி எல்லாம் விசிறி அடித்த அவள் எங்கே?

மழை ஊறிய ஓவியமாய் சாயம் போன நீ எங்கே?

காலம் தன் சவுக்கை பூக்கள்

மீது சொடுக்கமாலிருக்கலாம் !

மீண்டும் வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்

நீயும் நானும்



பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது

உன் அம்மாவின் மரணம் :(

சரத்தின் சருகு சொல்லியது

உன் பொருளாதாரம்

புகைப்படத்திலும் சிரிக்க தெரியாமல்

பாவமாய் உன் இரு பிள்ளைகள்!



தேநீர் தந்தாய்! பட்டு விடக்கூடாதென்ற

உன் அச்சத்திலும் தொட்டு விட கூடாதென்ற

என் நடுக்கத்திலும் சிக்கிய கோப்பை

சிறிதே தள்ளாடியது !!!!



மௌனம் திரட்டி பழங்கதை பேசி

வெள்ளை அடிக்காத சுவரில் பல்லி பார்த்து

ஓரகண்களால் உயிர் தடவி

இனிமேலும் இங்கிருப்பின் கண்ணீரோடு

உண்மைகளும் கொட்டிவிடும் என்றஞ்சி

கும்பிட்டு வெளியேறி கடைசி

விடை சொல்ல ஜன்னல் கம்பிகளில்

உன்கண்கள் தேடிய போது

கார் கதவு சாத்த வந்த உன் கணவன்

சொன்னான்

நீங்களே அவளுக்கு தாலி கட்டியிருக்கலாம்



உன் போல் பெண்மக்கள் ஊர் உலகில் எத்தனையோ

காதலுற்ற சேதியினை காதலர்க்கு சொல்லாமல்

கணவருக்கு சொன்னவர்கள்

Monday, March 5, 2012

அரவான் எனது பார்வையில்



                 இதுவரை எந்த படத்திற்கும் விமர்சனம் எழுதவேண்டும் என்ற என்னத்தை உண்டாக்காத தமிழ் படங்கள்,அரவான் பார்த்ததும் அந்த எண்ணத்தை உடைத்தெறிந்து இதோ இப்பொழுது டைப்பி கொண்டிருக்கிறேன்.
வசந்த பாலனின் முதல் படமான "ஆல்பம்" படத்தை நான் பார்க்கவில்லை.இரண்டாவது படமான "வெயில்"ன் தாக்கம் இரண்டு மூன்று நாட்களாக என் தூக்கத்தில் கூட விடாமல் தகித்தது.அடுத்த படமான "அங்காடி தெரு" வை பற்றி தனியாக எழுத தேவையே இல்லை.சமுதாயத்தின் பார்வையில் கீழ்மட்ட மனிதர்களாக பார்க்கப்படும் அடித்தட்டு மனிதர்களின் வாழ்கையை கண்ணாடி போன்று கண் முன் நிறுத்திய யதார்த்தமான பதிவு.இந்த வரிசையில் என் இதய சிம்மாசனத்தில் பாலாவிற்கு சரி சமாக வசந்தபாலனும் அமர்ந்தார்.
                     அந்த வகையில் அரவான் பட அறிவிப்பு வெளிவந்த சமயம் முதலே ஆவலை கிளப்பி கொண்டிருந்த அரவானின் டீசர் பார்த்த உடன் முதலில் தோன்றியது கதையின் நாயகன் "ஆதி" கதாநாயகியுடன் சரசமாடிய காட்சிகளை கண்ட போது கொடுத்த வாய்த்த மனிதர் என்ற என் எண்ணத்தை படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சுக்கு நூறாக உடைத்தார்.இளம் கதாநாயகர்கள் மத்தியில் இவரின் உழைப்பும்,அர்பணிப்பும் பிரம்பிப்புட்டுகின்றன.ஒரு ரசிகனின் வேண்டுகோள் தயவு செய்து அய்யனார் போன்ற மொண்ணை படங்களில் நடிக்க வேண்டாம் என்பதே.




                         பசுபதியை பற்றி தனியாக பாராட்ட வேண்டியதே இல்லை.படத்தின் இரண்டாவது நாயகன் இவர் தான்.தமிழ் சினிமாவின் நல்ல காலம் பிரகாஸ்ராஜ் என்ற நல்ல நடிகரை வில்லன் நடிகர் என்று முத்திரை குத்தியது போல், இவருக்கென்று ஒரு இமேஜ் வட்டதிற்குள் சிக்க வைக்காமல்   இவரை சுதந்திரமாக உலவ விட்டிருப்பது தான்.அவரின் பொருளாதார வாழ்க்கை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இவர் இப்படியே தொடர்வார் என் எதிர்பார்க்கிறேன்.

இனி படத்தை பற்றி :

                             அரவானின் முதல் பாதி ரயில் எஞ்சின் போல,போகும் இடம் சேர [கிளைமாக்ஸ்] பயன்பட்டு இருக்கிறது.இருந்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டின் போக்குவரத்து கால்நடையாகவே குறிப்பிட்ட பகுதிக்கு சென்று தகவல் பரிமாறுதல்,பண்டமாற்று முறை போன்றவற்றை படித்த நமக்கு திரை வடிவம் நிச்சயம் சுவாரசியமே.நா.முத்துகுமார் அவர்களின் பாடல் வரிகளும்,ஒளிபதிவாளர்ரும் கலக்கி இருக்கார்.

                             இரண்டாம் பாதி அபாரம்.அதிலும் இறுதி முப்பது நிமிடங்களில் மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ஆதியின் நடிப்பு,மனிதர் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்.ஆதியை பார்க்கும் போது என் தமிழ் சகோதரர்கள் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் இருபது வருடங்களுக்கு மேலாக மரணத்தை எதிர் நோக்கும் கொடுமையை உணர முடிந்தது.பதினெட்டாம் நூற்றாண்டின் வழக்கப்படி முப்பது முடிச்சு போட்ட கயிறை பார்க்கும் போது, என் சகோதரகளுக்கு கணக்கில் வராத எத்தனை முடிச்சு என்பது பெரிய கேள்விகுறி யாக வளைந்து நம் முன் நிற்கிறது.

                           படக்குழுவினர் அனைவரின் உழைப்புக்கும் மனதார வாழ்த்துகளும் பாராட்டுக்களும். அப்படியே பொன்னியின் செல்வன் போன்ற தலையணை நாவல்களையும் திரை வடிவம் கொடுத்தால் வரும் தலைமுறை உங்களை நன்றியுடன் நினைவு கூறும்.

                             மரண தண்டனை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு படமான விருமாண்டியை விட இந்த அரவான் இன்னும் ஆழமாக பதிகிறான்.படத்தில் குறைகளே இல்லையா என்றால் கண்டிப்பாக இருக்கு.இருந்தாலும் படம் சொல்ல வரும் கருத்திற்கு ஒரு ராயல் சல்யூட் அடித்து,மரண தண்டனையை  ஒழித்த  நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர ஆசைபடும் ஒரு தமிழனாக இந்த பதிவை எழுதி முடிக்கிறேன். 
  

Friday, December 30, 2011

இறப்பும் (2011) பிறப்பும் (2012)

            இந்த வருஷத்தில் "எனக்கு" நடந்த நல்லது, கெட்டதுகளின்,தொகுப்பே இந்த பதிவு.

              என் நண்பன் பிரபுவை பற்றி ஒரு சிறு அறிமுகம்.நானும் அவனும் ஆறாவதில் இருந்து  பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம், சாரி பள்ளிக்கு சென்றோம். எங்க ரெண்டு பேரையும் பிரிக்கிறது தான் எங்களோட ஆசிரியர்களோட முதல் வேளை.அப்படி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா பாடம் எடுக்கவே விட மாட்டோம்.செம ரகளையா இருக்கும்.வகுப்புக்கு உள்ள ரெண்டு பேரும் உக்காந்து இருந்தத விட, வெளிய முட்டி போட்டுட்டு தான் அதிக நேரம் இருப்போம்.ஒண்ணா சேர்ந்து கட் அடிச்சுட்டு படத்துக்கு போய், வகுப்பாசிரியரிடம் கையும், களவுமா சிக்கி, அப்புறம் எப்படியோ முட்டி முட்டி படிச்சு, கடைசியில, ரெண்டு பேரும் பாஸ் ஆகி நான் +1 சேர்ந்துட்டேன். என் நண்பன்   டிப்ளமோ சேர்ந்து விட்டான்.அப்புறம் நான் "கலைஅறிவியலில்" சாதனை செய்ய முடிவெடுக்க,அவன் பொறியியலில் இறங்கி விட்டான்.எங்கள் நட்பில் சிறிய இடைவேளை.இருந்தாலும் இருவரும்  கிடைக்கும் சமயங்களில் நட்பை பேணி பாதுகாத்து வளர்த்து வந்தோம்.மார்ச் மாத தொடக்கத்தில், வேறு ஒரு நண்பனிடமிருந்து வந்தது அந்த கைபேசி அழைப்பில் "மச்சான், நம்ம பிரபுவுக்கு ஷாக் அடிச்சு ICUல இருக்கான்.ரொம்ப சீரியஸ்" என்றது அந்த அழைப்பு. கண்ணாடி ரூம்ல இருந்த அவனை பார்த்துட்டு வந்த இரண்டொரு நாளில், அதாவது "மார்ச் 3 " எங்கள் நண்பன் இறந்துட்டான்.எப்பவுமே திட்டிட்டு இருக்குற அவங்க அப்பா "சிங்கம் மாதிரி சுத்திட்டு இருந்தவன எமன் தூக்கிட்டு போயிட்டானே" என்று அழுததை பிரபு கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. அந்த காட்சி கணமும் என் நெஞ்சில் இருக்கிறது.இப்பவும் என் மொபைல்ல இருக்குற அவன் நம்பர் என்னை நட்போட தான் பார்த்துட்டே இருக்கு.நானும் தான்.என் பள்ளி பருவத்தை இனிமையாக்கியவனே, I MISS YOU மச்சான்.     

              இப்படி 2011 ஏப்ரல் வரைக்கும் கடுப்பா தான் போயிட்டு இருந்தது.ஏதோ தூங்க வேண்டியது,எந்திரிக்க வேண்டியது,பெட்டி தட்ட வேண்டியதுன்னு போய்கிட்டு இருந்த வாழ்க்கையில   திடீர்ன்னு புயல் வீசியது.புயல்னாலே என்ன? காதல் விவகாரம் தான்.நண்பரோட காதல் "எப்படியோ" பொண்ண பெத்தவங்க வீட்டுல தெரிஞ்சு, பொண்ணு வீட்டுல பிரச்சனை. அப்புறம் என்ன, ஒரு மாசமா பிளான் பண்ணி, மே 30 சுபயோக தினத்தன்று திங்கள் காலை திருமணத்தை நடத்தி வைத்தோம்.இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மாலை வாங்குறதுல இருந்து, சார் பதிவாளர் அலுவலகத்துல பதிவு பண்ற வரைக்கும்,எல்லாத்தையும் கூட இருந்து கவனிச்சதால ஒரு கல்யாணத்த முடிக்கிறது எவ்ளோ பெரிய கஷ்டம்ன்னு   தெரிந்தது. இதெல்லாம் விட பெரிய விஷயம் அந்த பொண்ணுக்கு ஒரு அண்ணன்காரன் சார் இருந்தாரு.அவரு எப்ப வேணாலும் பிரச்னை பண்ணுவாருன்னு மாப்ள சொல்லி இருந்ததால், அவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு பத்து நாளைக்கு அப்புறமும் கூட ஒரே படப்பிடிப்பாக தான் இருந்தது. நல்ல வேளை எதிர்பாத்த மாதிரி எந்த பிரச்சனையும் இல்லாம சுமுகமாக இரு வீட்டாரும் பேசி தீர்த்து விட்டார்கள்.அப்புறம் ஆகஸ்ட்ல வரவேற்பு வைச்சு கல்யாண விருந்து வைத்தார்கள்.என்னோட இத்தனை வருஷ சர்வீஸ்ல சினிமால  மட்டுமே பார்த்துட்டு இருந்த சீனை எல்லாம்,முதல் முறையா என் வாழ்கையில் ஒட்டி காமிச்ச அந்த ஆதர்சன தம்பதிகளுடன் விழாக் கமிட்டியினர்.




                           அக்டோபர் 2 ஞாயிறு மதியம் ஒரு காட்டுக்குள்ள வழக்கம் போல கிரிக்கெட் ஆடிகொண்டிருந்தேன்.அப்ப வீட்டுல இருந்து கூப்பிட்டு, இன்னொரு சோகமான செய்திய சொன்னாங்க.மனோகர் மாமா தவறிட்டாங்க.எப்படியோ கடைசி பஸ்ஸ புடிச்சி, கோவில்பட்டி போற வரைக்கும், ஒண்ணுமே விளங்கல. என்னடா மாமா நல்லா தான இருந்தாருங்கற வரைக்கும் இருந்த மனநிலை,அவரு இப்ப இல்லைங்கரத ஏத்துக்கவே முடியல. கோவில்பட்டி நெருங்கவும்  சுப்பையாதேவர் மிட்டாய்கடை என் கண்ணில் பட்டது.எனக்கு ஒரு நாலு வயசு இருக்கும்.அப்ப நாங்க கோவில்பட்டியில தான் இருந்தோம்.தெருமுனைல இருக்கிற பிள்ளையார் கோவில் தான் எனக்கு விளையாடுற இடம்.இரவு எட்டு மணி போல ,எங்க மாமா அலுவலகம் முடிச்சுட்டு அந்த வழியா தான் வருவாரு.நான் கேட்காமலே,தினமும் அம்பது காசு தந்துட்டு தான் போவாரு.சுப்பையாதேவர் மிட்டாய் கடையில, அம்மாக்கு தெரியாம அப்ப சாப்பிட்ட கருப்பட்டி மிட்டாயோட இனிப்பு, இத்தனை வருடத்திற்கு பிறகு முதல் முறையாக கசந்தது.அப்பவும் சரி,இப்பவும் சரி  எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து,எதாவது விசேஷ வீட்டுல பார்த்தாலும்,
நல்லா இருக்கியா?
நல்லா இருக்கேன் மாமா.
நல்லா படிக்கிறியா?
வேளை எல்லாம் எப்படி இருக்கு?
நல்லா போகுது மாமா?
 இது மட்டும் தான் எங்களுக்குள் இருந்த உரையாடல்கள்.ஆனா இவரு தான் என் பால்ய கால கனவு நாயகன்.அம்மாகிட்ட கூட சொல்லுவேன், நான் பெரியவனாகி மாமா மாதிரி ஆபீஸ் போவேன்.நைட் தான் வருவேன்.நைட் லேட்டா வந்ததுக்கு அடிக்க மாட்டல்லன்னு கேப்பேன்.என்ன சொல்றது இதோட ரெண்டாவது துக்கமான சம்பவம்.     

                    டிசம்பர் 5 ரொம்ப நாளாவே தள்ளி போயிட்டு இருந்த எங்க பெரிய அண்ணன் பிரகாஷ் [பெருசு] ஒரு வழியா திருமணம்,பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது தான்.இந்த கல்யாணத்தை  பொறுத்த வரை,மண்டபம் பிடிச்சி,பத்திரிகை கொடுத்து, பந்தக்கால்,வாழைமர தோரணம்  நடுறதுல இருந்து,பந்தி பரிமாறி, மண்டபத்தை காலி பண்ணி வீட்டுக்கு வந்து பால் பழம் சாப்டுற வரைக்கும், வேளை பெண்ட் கலண்டுருச்சு.இதற்க்கு நடுவில் Bachular பார்ட்டியை தலைமை தாங்கி,பிரச்னை இல்லாமல் நடத்தி வைத்தது தான் பெருங்கொடுமை.அதனால் என்ன, பெருசு தாலி கட்டுறப்ப வந்த "ஆனந்த கண்ணீர்" என்னோட எல்லா களைப்பையும் துடைத்து.யப்பா முதல்ல நாங்களா  நடத்துன கல்யாணத்தை விட, இந்த கல்யாணத்துல, தான் படுத்திவிட்டார்கள. சாவியோட வாஷிங்டனில் திருமணத்தில் சம்பந்தி சண்டைன்னு ஒரு பகுதி வருமே, அந்த மாதிரி எல்லாம் எதாவது நடந்துட கூடாதுன்னு, ரொம்பவே மெனக்கெட வேண்டியாதாக இருந்தது.எத பண்ணலும் ஒரு பத்து அறிவுரைகள் வந்து விழுகுது.ஒரு வழியாக நல்லா படியாக முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

             இத்தனை வருஷம்,பெரியவங்க எதாவது படிக்க சொல்லுவாங்க.நானும் ஏதோ படித்து முடித்து விட்டேன்.இப்ப தான் முதல் முறையாக சுயமாக யோசித்து,இந்த டிசம்பரில்   தான் MA JOURNALAISAM AND MASS COMMUNICATION படிப்பிற்கு விண்ணப்பித்து உள்ளேன்.படித்தால்,வேளை கிடைக்குமா,நிறைய மார்க் எடுக்கனும்ங்றது  போன்ற எந்த தொல்லையும் இல்லாம,மனசுக்கு பிடித்த படிப்பை புரிந்து படிக்கலாம்ன்னு முடிவு செய்து இருக்கேன்.பாப்போம்.

                டிசம்பர் 18 சிறப்பான  நாளாக அமைந்தது.அலுவலுக்கிடையில் டென்சனை குறைப்பதற்கு, நிறைய வலி இருக்கு.அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது ட்விட்டர் தான்.அந்த நண்பர்களை சந்தித்தேன். @karna_sakthi @rajanleaks @kmsekar2003  @rammyramni @DKCBE  . சிறப்பாக இருந்தது அந்த சந்திப்பு.அப்புறம் புத்தக வாசிப்பு என்பது,என் மட்டில் சுஜாதா புத்தகங்கள் மட்டும் தான் என்று எண்ணி கொண்டிருந்த எனக்கு,விகடன் மூலம் அறிமுகமான  திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை, படிக்க ஆரம்பித்ததும், எனது பார்வையை மாற்றி கொண்டேன்.அவரை  நேரில் சந்தித்தது,கையெழுத்து வாங்கியது மகிழ்ச்சியான தருணம்.




அப்புறம் வழக்கம் போல, என்னோட கிரிக்கெட் டீம்ல இந்த வருட தொடக்கத்தில், துவக்க ஆட்டகாரராக களமிறங்கிய என்னை,என்னுடைய "சிறப்பான பார்ம்"   காரணமாக இப்போது ஐந்தாவது ஆட்டகாரராக களமிறக்குகிறார்கள்.அது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.சரி பண்ணனும்.பார்க்கலாம்.

வருடம் முழுவதும் என் இம்சையை தொடர்ந்து தாங்கி கொண்டிருக்கும் எனது அண்ணன் மதன் குமார் அவர்களே, உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறி கொள்ள விரும்புகிறேன்.அப்படி தான் தொடந்து இம்சையை கொடுப்பேன். உன்னால முடிஞ்சத பண்ணிக்கோ அண்ணா.

வாழ்கைன்னா இன்பம் துன்பம் கலந்தது அப்படிங்கற வசனத்தை சினிமால பார்த்துருக்கேன்.படிச்சு இருக்கேன்.ஆனா அப்படியே கண்ணு முன்னாடி ஓட்டி காமிச்சது இந்த வருடம் தான்.என் வாழ்கையில் மறக்க முடியாத வருடமாக நிறைந்துவிட்ட இந்த வருடத்தை,இனி வர போகும் வருடங்களுக்கான ட்ரைலர் ஆக தான்   பார்க்க முடிந்தது.


புத்தாண்டு சபதம் என்றால் அம்மாகிட்ட கோபப்பட்டு உண்ணாவிரதம் இருக்கிறத, இந்த வருடத்தில் இருந்து நிறுத்தனும்.பசி தாங்க முடியிறது இல்ல.

என் இனிய நண்பர்களே,சொந்தங்களே,பந்தங்களே
.1321801488_img1.jpg
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Thursday, October 6, 2011

ஒவ்வொரு பிரண்டு[FRIEND]ம் தேவை மச்சான்


                 இந்த உலகத்தில காசு,பணம்,செல்போன்  இல்லாம கூட மனுசங்க இருப்பாங்க,அட அவ்ளோ ஏங்க லவ் பண்றதுக்கு பொண்ணு கூட இல்லாம இருக்கிறவங்கள எங்கையாவது தேடி பார்த்தா கண்டிப்பா மாட்டிடுவாங்க,ஆனா  பிரண்டு இல்லாத ஆளுகள, தேடினா கூட கிடைப்பது அரிது.இதை தான் பெரியவங்க அம்பானியானாலும் பிரண்டு வேணும்,அட அரை டிக்கெட் ஆனாலும் பிரண்டு வேணும்ன்னு சொல்லுவாங்க..

WHY DO WE NEED FRIENDS

             ஸ்கூல் படிக்கிறப்ப நாம மட்டும் தனியா  கிளாஸ் கட் அடிச்சோம்ன்னா, ஒரு வேளை மாட்டிகிட்டாலும், நாம மட்டும் தனியா உப்பு மேல முட்டி போடனும் அப்பா அம்மாவா ஸ்கூல்க்கு கூப்ட்டு  போகனும்.இதே செட் சேர்ந்து கட் அடிச்சோம்ன்னா எல்லாத்லயும் பங்கு நண்பனும் எடுத்துக்குவான்.

           காலேஜ் படிக்கிறப்ப பக்கத்துக்கு department கூட நடக்குற பஞ்சயாத்துல நண்பன் இல்லைனா நம்மள என்னைக்கோ காலி பண்ணி இருப்பாங்க.,நம்ம ஒரு பிகர்'ர'  பார்த்த உடனே  அவளோட ஜாதகத்தையே அலசி ஆராய்ந்து, மச்சி அவ உனக்கு செட் ஆக மாட்ட,வேற ஒருத்தன லவ் பண்ற விசயத்தை பக்குவமா "ஊத்தி" சொல்லி,புதுசா சரக்கு அடிக்கிற பழக்கத்தை சொல்லி கொடுத்தியே மாப்ள.,அடடா நண்பா உன்னை நினைச்சாலே சிலிர்த்துக்கும்.

          அப்புறம் பட்டதை வாங்கி,பறக்க மட்டும் விட்டுட்டு வேளை வெட்டிக்கு போகாம தண்ட சோறு சாப்பிட்டு சுத்திட்டு இருக்கிற காலத்தில,வீட்டுல கேக்குற நியாமான கேள்விக்கு,தேவை இல்லாம சாப்பாடு மேல சண்டை போட்டுட்டு,வெட்டி வீராப்பா ரெண்டு நாள் சாப்டாம இருக்கிறப்ப, ஆறுதலோட  பசியையும் தீர்த்து வைப்பியே நண்பா, You are Really Great.  
 

                           இதெல்லாத்தையும் விட TASMAC ல காசு கணக்கு பாக்காம குடிச்சுட்டு,மச்சான் காசு பத்தல,கட்டபொம்மன் வீதி கடைக்கு வாடான்னு கூப்டுரப்ப எல்லாம், உன் கலெக்டர் வேளை எல்லாம் தள்ளி வச்சுட்டு,சரியான நேரத்துல என்னை மீட்டுட்டு போவியே,அதெல்லாம் மறக்க முடியுமா?    

                         புதுசா ஜட்டி வாங்கி  இருக்கேன் மச்சி,என்னடா இவ்ளோ விலை சொல்றான்னு ஆரம்பிச்சி  அம்மாவுக்கும் அப்பாக்கும் சண்டை, ரொம்ப சங்கடமா இருக்குதுன்ங்கறதுல இருந்து,இந்த டேமேஜர் மண்டையன தூக்கணும் மச்சி,ஆபீஸ்ல ஓவர்'ஆ'  ஆடுறான்னு ஷேர் பண்றதுல இருந்து,ஒபாமா வைட் ஹவுஸ் லே ஒன்னுக்கு போற வரைக்கும் வெட்டியா பேசுன என்கிட்டே, இதெல்லாம் எப்படிடா மறக்க முடிஞ்சது உங்களால??

                    இதுவரைக்கு நல்லா தானடா இருந்தீங்க,திடீர்ன்னு எங்க இருந்து வந்தது இந்த லவ்.????????????

                    மச்சி, என் பிகரோட அண்ணன் தான் பெரிய ப்ரோப்ளம் பண்ணுவான் போல,இந்த ஜாதி தான் பெரிய ப்ரோப்ளம் ஆ இருக்கும்ன்னு நினைக்கிறேன்,எங்க அப்பன் தான்டா  எனக்கு வில்லன், பசங்க கிட்ட சொல்லி வை,எப்ப அவங்க வீட்டுல பிரச்சனை ஆனாலும் வீடு பூந்து தூக்கனும்ன்னு சரக்கடிச்சுட்டு புலம்புற வரைக்கும் கூட நல்லா தான இருந்தீங்க...
                இதுவே பொண்ணோட அப்பன்,அதான் உங்க மாமனாருக்கு எப்படியோ விஷயம் தெரிஞ்சு,உன்னை பத்தி விசாரிச்சு,சரி மாப்ள தங்கமா இருக்காரு,நம்ம சிம்பிள் ஆ கல்யாணத்தை வைச்சுகலாம்ன்னு மட்டும் சொல்லிட்டாருன்னுங்கற விசயத்தை நீ எப்ப சொல்லுவ தெரியுமா? மச்சி நாளைக்கு எனக்கு கல்யாணம்ன்னு கூப்பிடரப்ப தான் சொல்லுவாங்க,அதுவும் அவனுகளா சொல்ல மாட்டாங்க,நம்ம நோண்டி நோண்டிகேட்டதுக்கு அப்புறம் தான் சொல்லுவானுக.
 

               ஜட்டி வாங்குற விசயத்தை எல்லாம் சொல்ற நீங்க, குட்டி போட நடக்க போற கல்யாணத்தை மட்டும் ஏண்டா வேண்டா வெறுப்பா சொல்றீங்க, நாங்க என்ன உங்க கல்யாணத்தை நிறுத்தவா போறோம்.அதிகபட்சமாக என்ன கேக்க போறோம்,லவ் ஓகே ஆனப்ப ஒரு HALF ,கல்யாணம் முடிவு ஆன உடனே இன்னொரு HALF , கல்யாணத்துக்கு இன்னொரு HALF .

              சரி இப்ப மட்டும் என்ன பண்றது,கல்யாணத்துக்கு வந்து கை காசு போட்டு குடிக்க வேண்டியது தான்., ஆனா நல்லா கேட்டுகோங்க மச்சிகளா,மாப்பிகளா, எல்லாம் ஒரு ரெண்டு வருஷம் வரைக்கும் தான்,திருப்பி எங்ககிட்ட தான் வரணும்,மச்சி குழம்புல ஏண்டி உப்பு கம்மியா இருக்குதுன்னு கேட்டதுக்கு சண்டைக்கு வர்றா,எங்க அம்மாவ ஏண்டி அப்படி பேசுனன்னு  கேட்டதுக்கு அவ அம்மா வீட்டுக்கு போய்ட்டான்னு, நாம குடிக்க பழகின அதே பார்ல உக்காந்து சரக்கடிச்சுட்டு நீ என்கிட்ட தான் புலம்பணும், அதனால தான் சொல்றேன் மச்சி,

ஒவ்வொரு பிரண்டு[FRIEND]ம் தேவை மச்சான்

Wednesday, March 16, 2011

கன்னி [TEEN - AGE] கவிதை

 

நினைவுகளால் ஆன என் நாட்குறிப்பு
வெறும் காகிதமாகிறது.........

உணர்வுகளால் ஆன என் இதயம்
வெறும் உறுப்பாகிறது...........

lonely-man.jpg

தாஜ்மாகலாய் தோன்றிய நம் பேருந்து நிறுத்தம்
வெறும் பேருந்து நிறுத்தம் ஆகிறது........

ஏனென்றால்

என்னவள் இல்லை.........?


ஆமா
ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்க. அவள பார்க்க முடியாதில்லை அல்லவா.!

என்னோட 15 வயசுல எழுதின முதல் கவிதை.

கோடை விடுமுறையில் தலைவியின் பிரிவை தாங்க முடியாமல் தலைவன் (அது  நான்தானுங்க) எழுதியது. பள்ளி விடுமுறை முடிந்து அவளிடம் இதை காண்பித்தேன்.அதுக்கு அவ சொன்னா "இது எங்கயோ குடும்ப மலர்ல படிச்ச மாதிரியே இருக்குன்னு". அப்ப இருந்து இப்ப வரைக்கும் கவிதை எழுதுறது இல்ல .....................................................................  அவளுக்கு..!

பின் குறிப்பு: பேச்சாளர்களின் முதல் பேச்சை கன்னி பேச்சு என்பார்கள். அதை போல தான் எனது முதல் கவிதையும் கன்னி கவிதை. எப்புடி..?

Monday, January 10, 2011

சனிக்கிழமை இரவு பீலிங்

பெரிய முதாலாளி ஆவதற்கு ஆக சிறந்த வழி, நல்ல பிகர் வீட்டு முன்னாடி பெட்டி கடை வைக்குறது தான்#எவ்ளோ தம் அடிக்கிறானுக

அழகாக அழும்,அழகான சிறு பெண் குழந்தைகளை காண நேரிடும் போது,பெரியவளாகி எத்தனை பேர அழ வைக்க போறியோன்னு மனசு நினைக்குது

நீ பிறந்த பிறகுதான் உன் அப்பாவுக்கே பெயர் வைத்தார்களா? அழகப்பன் என்று! யப்பா என்னா அழகு ப்பா #மாமனார் அப்டேட்ஸ்

அவளை நினைவுபடுத்துபவற்றை அழிக்க வேண்டுமானால், இந்த உலகத்தையே அழிக்கத்தான் வேண்டும்... #காதல்

காதலிக்க பெண்ணே கிடைக்காதவனும் காதலில் தோற்றவன்தான்



இரவு நீண்டுகொண்டே இருக்கிறது, கையில் கொடுக்கவிருக்கும் காதல் கடிதம் # Dreams

காதலர் தினம் பிப்ரவரியில் வருவதால் தானோ,அந்த மாதத்திற்கு மட்டும் ஆயுள் குறைவு #உசார் மக்கள்'ஸ்



ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு ஆணின் தோல்விக்கு பின்னாலும் ஒரு ஃபிகர்-தான் இருப்பாள்.. #நிதர்சனம்

கோவையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, பல மேம்பாலங்களை கட்ட தமிழக அரசு முடிவு#யாருக்கு என்ன பண நெருக்கடியோ

பெரியாரை விட மிகப் பெரிய நாத்திகர்கள்,ஐயப்பனுக்கு மாலை போட்டு புகை,தண்ணி அடிக்கும் ஆசாமிகள் தான்#சுவாமியே சரணம் ஐயப்பா

தொடர்ந்து வரும் மொக்கை குறுஞ்செய்திகளை படித்த உடன் அழிக்கும் பழக்கத்தால், சில நல்ல குறுஞ்செய்திகளும் என்னால் அழிக்கபடுகின்றன#அனுபவம்

விவாதம் முடிவுகளைத் திணிக்க முயலும் அமைதிப் போராட்டம் # Dont Argue With Others

காதல் சிற்றின்பங்களில் சிலாகிக்க வைத்து, பேரின்பத்தின் மீது பேரிடியாய் இறங்குகிறது#என்னது தண்ணி அடிக்க கூடாதுங்களா #கொடுமை

எந்த சண்டையும் சச்சருவுமின்றி போய் கொண்டு இருக்கிறது அவள் ஞாபகங்களோடு நான் நடத்தும் குடித்தனம்# One Side Love Feeling.

கதாநாயகர்கள் காதலிக்க வேண்டும் என்பதற்காகவே கதாநாயகிகள் குருடனுக்கு சாலை கடக்க உதவுகிறார்கள்,தர்மம் செய்கிறார்கள்#தமிழ் சினிமா

ஊர் தாகம் தீர்க்க இளநீர் விற்கும் பெருசு தன் தாகத்திற்கு டீ கடையில் தண்ணீர் இரவல் வங்கி குடிக்கிறது#முரண்

எல்லோரோட பிரச்சினையும் அவங்க அவங்க சம்பளத்த விட ஒரு ஜீரோ அதிகமா தான் இருக்கு #போதையில் நண்பன் சொன்னது

பத்தாம் வகுப்பிற்கு பொது தேர்வு அவசியம்.அப்போது தான் நமக்கு இன்னும் பல சச்சின்களும்,சினமா இயக்குனர்களும்,கிடைப்பார்கள்#ஹி ஹி நானும் பெயில்

உபயோகிப்பாளர்களின் உடல்நலனில் அக்கறை இல்லாத இரண்டே பேர் மது மற்றும் புகையிலை உற்பத்தியாளர்கள் #பீலிங்

மரணத்திற்கு பயப்படாதவர்கள் கூட மழைக்கு பயப்படுகிறார்கள். எல்லார் தலையிலும் ஹெல்மெட் மழை நாளின் போது #என்ன கொடுமை சார் இது

குவார்ட்டர் அடிச்சுட்டு மட்டை ஆகிறத விட கட்டிங் அடிச்சுட்டு புலம்பரதுல இருக்கிற சுகமே தனி என்று நண்பன் சொல்கிறான்!

நான் காதல் கொண்ட அனைத்தும் என்னை கைவிடப்பட்ட நிலையில்,தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்திதுவாய்டுங்களா #நாளைக்கு சனிக்கிழமை.

Friday, December 31, 2010

HAPPY NEW YEAR 2011

                    இந்த வருடத்தில் எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் "JUST LIKE THAT,IT HAPPENS" அப்படின்னு கடக்க எனக்கு எல்லா விதத்திலும் உதவிய,எனக்கு பிடித்த நண்பர்களை பற்றிய பதிவு. இதே மாதிரி இன்னும் எத்தனை வருடம் வேணாலும்  என்கூட  இருப்பாங்கன்னு எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. இது கவுன்ட் டௌன் கிடையாது.  எல்லாத்தையும் பத்தி எழுதலாம்னு ஒரு நினைப்பு. இப்ப தான் அதுக்கு நேரம் வந்து இருக்கு.

என் பால்ய கால நண்பர்கள்:
இடமிருந்து வலம் : சிராஜ்,பரணி,சரவணன்,பரணி,யுவராஜ்,மோகன்,அப்பு                                                             

                         இந்த செட்டுக்கு ஐயா தான் கேங் லீடர்.  எல்லாரும் என்னை விட சின்ன பசங்க. எப்ப என்ன பிரச்சனை வந்தாலும் கொஞ்சம் கூட அதை பெருசு பண்ணாம அப்படியே அந்த பிரச்சனை கால்லையே  விழுந்து, அதுல இருந்து  ஜகா வாங்கிடுவாங்க. இப்ப அவங்க எல்லாம் படிக்கிறதுல [சாரி ப்பா தப்பா நினைச்சுகாதீங்க] பிஸி ஆ இருப்பதினால் வாரத்துக்கு ஒரு டைம் தான் பார்பேன். நடுவுல எதாவது பசங்க காலேஜ் கட் அடிட்சாங்கன்னா, மறக்காம என்னையும்  கூட சேர்த்திகுவாங்க. அப்படியே நாமளும் அன்னைக்கு மட்டும் காலேஜ் பையன் மாதிரி ஜாலி ஆ  இவனுக கூட சுத்திட்டு  இருப்பேன்.
                         எப்ப என்ன வேலைன்னாலும் வந்து முன்னாடி நிப்பானுங்க.அப்படி என்ன பெரிய வேலைன்னா "நான் என் காதலியை பார்த்து சைட் அடிக்க போகும் போது, அவளுக்காக காத்திருக்கும் வேளைகளில் வந்து எவ்ளோ நேரம் வேணாலும் வெயிட் பண்ணுவாங்க. பதிலுக்கு பெருசா ஒன்னும் செய்ய வேண்டியதில்லை. திருப்பி அவங்க ஆளுகள பார்க்கும் போது கூட போகணும்.
                        இப்ப எல்லோரடா நட்பு வட்டமும் பெருகியதில் இருந்து, அப்டியே முன்ன இருந்தா நெருக்கம் போய்டுச்சு, ஆனாலும் நட்பு மட்டும், பத்து  ரூபா இருந்தா கொடு டா தம் அடிக்கணும்க்ரதுல இருந்து பஸ் ஸ்டாண்ட்ல ஒரு பிகர் பார்த்தேன் மச்சிங்கறது வரைக்கும், பகிர்தல் இன்னும் அப்படியே தான் இருக்கு..ஒரு ஒருத்தனையும் பத்தியும் நிறைய எழுதுறதுக்கு இருந்தாலும், இன்னொரு நாள் எழுதுறேன். நன்றி பசங்களா, இந்த வருசமும் உங்க கூட  எனக்கு ரொம்ப நல்லா தான் இருந்தது. கண்டிப்பா நம்புறேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்ன்னு.....! 

என் அலுவலக சகாக்கள் மற்றும் எங்கள் பிக் பாஸ் 


நான்,கிரி,சதீஷ்,சுபாஷ்,தினகரன்,வெங்கட்,கார்த்திக்
(சிவப்பா [கலர்ல]இருக்கிறவங்க தான் எங்க பாஸ்)

                                                                            
                           நான் எவ்ளோ நாள் வேலைக்கு லீவ் போட்டாலும், என் வேலையும் சேர்த்தி பார்க்குற என் நண்பன் கிரி [என்னோட காலேஜ் கிளாஸ்மேட் தான்], என்ன தான் நான் வேலையில தப்பு பண்ணினாலும், என்னை விட்டு கொடுக்காத எங்க டீம் லீடர் சுபாஷ்[என்னோட காலேஜ் கிளாஸ்மேட் தான்], எங்க எல்லாத்தையும் CLIENT கிட்ட விட்டு கொடுக்காத எங்க பாஸ்,பாசமா  அண்ணா ன்னு கூப்பிடுரதுக்கு மூணு தம்பிக,
நான் வேலை பார்க்குற இடமும்,ரொம்ப நல்லா இருக்கும். ஒரு நாளும் வேலையில் டென்ஷன் ஆனதே இல்ல. [நீங்க சொல்றது கேக்குது வேலை செஞ்சா தான அது எல்லாம் வரும்]. ஒரு ஒருத்தரயும்  பத்தியும் நிறைய எழுதுறதுக்கு இருந்தாலும், இன்னொரு நாள் எழுதுறேன்.Thanks Guys இந்த வருசமும் உங்க கூட  எனக்கு ரொம்ப நல்லா தான் இருந்தது. கண்டிப்பா நம்புறேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்ன்னு.....! 

என் உடன் பிறவா சகோதரர்கள் பற்றி:


மதன், ஜூடு, பிரகாஷ், தியாகு

                              இதுல இருக்கிறவங்க எல்லாம் என்னை விட பெரியவங்க. நானும் எல்லாத்தையும் ரொம்ப மரியாதையா யோவ் பெருசுன்னு தான் கூப்பிடுவேன். நிறையா "நல்ல" விசயங்களை இவங்க கிட்ட இருந்து தான் பழகினேன். என்னோட பொருளாதார பற்றாக்குறைகளுக்கு எப்ப எவ்ளோ வேணாலும் உதவி பண்ணுவாங்க. எனக்கு சில சமயம் கோவம், கஷ்டம் வந்ததுன்னா, இவங்க கூட பேசி எல்லாத்தையும் அவங்க கிட்ட கொடுத்து விட்டு நான் நிம்மதி ஆகிடுவேன். அவங்களும் என்கிட்ட சின்ன பையன்னு எல்லாம் நினைக்காம எல்லா விசயத்தையும் ஷேர் பண்ணிக்குவாங்க..
ரொம்ப நல்ல அண்ணணுக...! ஒரு ஒருத்தரயும்  பத்தியும் நிறைய எழுதுறதுக்கு இருந்தாலும், இன்னொரு நாள் எழுதுறேன்.Thanks Guys இந்த வருசமும் உங்க கூட  எனக்கு ரொம்ப நல்லா தான் இருந்தது. கண்டிப்பா நம்புறேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்ன்னு.....!

எனது பேனா தோழி - கவினா

pen_pal.jpg

                                   இவங்கள பார்த்து தான் நான் வலைபூ ஆரம்பிச்சேன். ஒரு வருசத்துக்கு முன்னாடி நான் [ எழுதின ]போட்ட மொக்கைல இருந்து இப்ப இந்த மொக்கை வரைக்கும் சலிக்காம படித்து விட்டு நல்லா இருக்கு டா ன்னு கமெண்ட் போடுற ஆளு.  இப்ப வரைக்கும் அவங்கள நான் பார்த்தது இல்ல. இனிமேலும் ஐடியா இல்ல. இந்த நட்பு ரொம்பவே நல்லா இருக்கு. இந்த வருசமும் உங்க கூட  எனக்கு ரொம்ப நல்லா தான் இருந்தது. கண்டிப்பா நம்புறேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்ன்னு.....!

என் குடும்பம்:

                இது போலவே என் அப்பா,அம்மா, அண்ணன்,அண்ணன் பையன் எல்லோருமே என்கிட்ட நட்பா தான் இருப்பாங்க. யாருமே அவங்க போஸ்டிங் தகுந்த மாதிரி என்கிட்ட நடந்துக்க மாட்டாங்க. எங்க அப்பா "ஜாகிங் இவ்ளோ நாள் போகிற இல்ல" எத்தனை பிகர்அ  கரெக்ட் பண்றேன்னு கேக்குற ஆளு. உன் ஆள்ட நான் வேணா வந்து பேசட்டுமானு எங்க அம்மா கேப்பாங்க. அவ்ளோ பாசம். மம்மி,டாடி யே இப்படின்னா அண்ணனை பத்தி கேக்கவே வேண்டாம். ஆள் செம ஜாலி. ஆனா அப்பப்போ மொக்கை தான் போடுவான்.. சாரி போட்டோ தான் இல்ல. இன்னொரு நாள் காமிக்கிறேன்.

என் காதல்
love6.jpg&t=1
                        இந்த விசயத்தில மட்டும் தான் எனக்கு எழுதிக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் பெருசா நடக்கல. ஒரு வேளை இதிலயும் நான் ஜெயிச்சு இருந்தா, மேல சொன்ன அத்தனை மனிதர்கள் என் மேல வச்சு இருக்கிற பாசத்தை நான் மதிக்காம போய் இருக்கலாம், எல்லாம் நன்மைக்கே ன்னு இந்த விசயத்தையும் எடுத்துகிட்டேன்.

Happy_New_Year_2011_Wallpapers1.jpg

எழுதுறதுக்கு இன்னும் நிறைய பேரு இருக்கீங்க. மறந்து எழுதாமல் விட்ட நண்பர்கள் மன்னிக்கவும்.ஆனா எனக்கு கை வலிக்குது டைப் பண்ணி. என் இனிய அனைத்து நண்பகல் மற்றும் தோழிக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்........................................! HAVE A GREAT YEAR 2011 .........!


டிஸ்கி: என் முதல் தம் அடிச்சு பழகினது என் பால்ய கால நண்பர்களோடு.!
              என் தொழில் பற்றிய அனுபவங்களை பழகியது என் அலுவலக நண்பர்களோடு .!
              என் வாழ்க்கை பற்றிய அனுபவங்களை பழகி கொண்டு இருப்பது என் அண்ணன்களோடு.!
              நான் வலைபூ ஆரம்பிச்சு எழுத பழகி ஒரு வருஷம் ஆச்சு. அதான் உங்கள வச்சு எழுதி பழகிக்குறேன்.........!