அழும் குழந்தையும் நானும்
சில சமயம் மளிகை கடைகளில்,சில்லறை தட்டுப்பாடு
காரணமாக கிடைக்கும்
ஐம்பது பைசா மிட்டாய்களை,
எங்காவது தெருவோரங்களில்
எதற்காகவோ, காரணமே இல்லாமல்
அழும் குழந்தைக்கு
கொடுக்க நினைப்பேன்.
அதற்குள் எனக்குள் இருக்கும்
குழந்தை அழுது விடுவதால்
அதற்கே கொடுத்து விடுவேன்..!
சிறிது நேரத்தில் அழும்
அக்குழந்தைகளை காணும் போது,
அழுகைக்கான காரணத்தை புரிந்தவனாய்,
அங்கிருந்து நகர்வேன்
கணிப்பொறியை நோக்கி
அனுபவக் குறிப்பு
டைப்புவதற்க்கு........!
வழக்கம் போல இப்பவே சொல்லிட்டேன் இது கவிதை கிடையாது.