இந்த வருஷத்தில் "எனக்கு" நடந்த நல்லது, கெட்டதுகளின்,தொகுப்பே இந்த பதிவு.
என் நண்பன் பிரபுவை பற்றி ஒரு சிறு அறிமுகம்.நானும் அவனும் ஆறாவதில் இருந்து பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம், சாரி பள்ளிக்கு சென்றோம். எங்க ரெண்டு பேரையும் பிரிக்கிறது தான் எங்களோட ஆசிரியர்களோட முதல் வேளை.அப்படி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா பாடம் எடுக்கவே விட மாட்டோம்.செம ரகளையா இருக்கும்.வகுப்புக்கு உள்ள ரெண்டு பேரும் உக்காந்து இருந்தத விட, வெளிய முட்டி போட்டுட்டு தான் அதிக நேரம் இருப்போம்.ஒண்ணா சேர்ந்து கட் அடிச்சுட்டு படத்துக்கு போய், வகுப்பாசிரியரிடம் கையும், களவுமா சிக்கி, அப்புறம் எப்படியோ முட்டி முட்டி படிச்சு, கடைசியில, ரெண்டு பேரும் பாஸ் ஆகி நான் +1 சேர்ந்துட்டேன். என் நண்பன் டிப்ளமோ சேர்ந்து விட்டான்.அப்புறம் நான் "கலைஅறிவியலில்" சாதனை செய்ய முடிவெடுக்க,அவன் பொறியியலில் இறங்கி விட்டான்.எங்கள் நட்பில் சிறிய இடைவேளை.இருந்தாலும் இருவரும் கிடைக்கும் சமயங்களில் நட்பை பேணி பாதுகாத்து வளர்த்து வந்தோம்.மார்ச் மாத தொடக்கத்தில், வேறு ஒரு நண்பனிடமிருந்து வந்தது அந்த கைபேசி அழைப்பில் "மச்சான், நம்ம பிரபுவுக்கு ஷாக் அடிச்சு ICUல இருக்கான்.ரொம்ப சீரியஸ்" என்றது அந்த அழைப்பு. கண்ணாடி ரூம்ல இருந்த அவனை பார்த்துட்டு வந்த இரண்டொரு நாளில், அதாவது "மார்ச் 3 " எங்கள் நண்பன் இறந்துட்டான்.எப்பவுமே திட்டிட்டு இருக்குற அவங்க அப்பா "சிங்கம் மாதிரி சுத்திட்டு இருந்தவன எமன் தூக்கிட்டு போயிட்டானே" என்று அழுததை பிரபு கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. அந்த காட்சி கணமும் என் நெஞ்சில் இருக்கிறது.இப்பவும் என் மொபைல்ல இருக்குற அவன் நம்பர் என்னை நட்போட தான் பார்த்துட்டே இருக்கு.நானும் தான்.என் பள்ளி பருவத்தை இனிமையாக்கியவனே, I MISS YOU மச்சான்.
இப்படி 2011 ஏப்ரல் வரைக்கும் கடுப்பா தான் போயிட்டு இருந்தது.ஏதோ தூங்க வேண்டியது,எந்திரிக்க வேண்டியது,பெட்டி தட்ட வேண்டியதுன்னு போய்கிட்டு இருந்த வாழ்க்கையில திடீர்ன்னு புயல் வீசியது.புயல்னாலே என்ன? காதல் விவகாரம் தான்.நண்பரோட காதல் "எப்படியோ" பொண்ண பெத்தவங்க வீட்டுல தெரிஞ்சு, பொண்ணு வீட்டுல பிரச்சனை. அப்புறம் என்ன, ஒரு மாசமா பிளான் பண்ணி, மே 30 சுபயோக தினத்தன்று திங்கள் காலை திருமணத்தை நடத்தி வைத்தோம்.இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மாலை வாங்குறதுல இருந்து, சார் பதிவாளர் அலுவலகத்துல பதிவு பண்ற வரைக்கும்,எல்லாத்தையும் கூட இருந்து கவனிச்சதால ஒரு கல்யாணத்த முடிக்கிறது எவ்ளோ பெரிய கஷ்டம்ன்னு தெரிந்தது. இதெல்லாம் விட பெரிய விஷயம் அந்த பொண்ணுக்கு ஒரு அண்ணன்காரன் சார் இருந்தாரு.அவரு எப்ப வேணாலும் பிரச்னை பண்ணுவாருன்னு மாப்ள சொல்லி இருந்ததால், அவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு பத்து நாளைக்கு அப்புறமும் கூட ஒரே படப்பிடிப்பாக தான் இருந்தது. நல்ல வேளை எதிர்பாத்த மாதிரி எந்த பிரச்சனையும் இல்லாம சுமுகமாக இரு வீட்டாரும் பேசி தீர்த்து விட்டார்கள்.அப்புறம் ஆகஸ்ட்ல வரவேற்பு வைச்சு கல்யாண விருந்து வைத்தார்கள்.என்னோட இத்தனை வருஷ சர்வீஸ்ல சினிமால மட்டுமே பார்த்துட்டு இருந்த சீனை எல்லாம்,முதல் முறையா என் வாழ்கையில் ஒட்டி காமிச்ச அந்த ஆதர்சன தம்பதிகளுடன் விழாக் கமிட்டியினர்.
அக்டோபர் 2 ஞாயிறு மதியம் ஒரு காட்டுக்குள்ள வழக்கம் போல கிரிக்கெட் ஆடிகொண்டிருந்தேன்.அப்ப வீட்டுல இருந்து கூப்பிட்டு, இன்னொரு சோகமான செய்திய சொன்னாங்க.மனோகர் மாமா தவறிட்டாங்க.எப்படியோ கடைசி பஸ்ஸ புடிச்சி, கோவில்பட்டி போற வரைக்கும், ஒண்ணுமே விளங்கல. என்னடா மாமா நல்லா தான இருந்தாருங்கற வரைக்கும் இருந்த மனநிலை,அவரு இப்ப இல்லைங்கரத ஏத்துக்கவே முடியல. கோவில்பட்டி நெருங்கவும் சுப்பையாதேவர் மிட்டாய்கடை என் கண்ணில் பட்டது.எனக்கு ஒரு நாலு வயசு இருக்கும்.அப்ப நாங்க கோவில்பட்டியில தான் இருந்தோம்.தெருமுனைல இருக்கிற பிள்ளையார் கோவில் தான் எனக்கு விளையாடுற இடம்.இரவு எட்டு மணி போல ,எங்க மாமா அலுவலகம் முடிச்சுட்டு அந்த வழியா தான் வருவாரு.நான் கேட்காமலே,தினமும் அம்பது காசு தந்துட்டு தான் போவாரு.சுப்பையாதேவர் மிட்டாய் கடையில, அம்மாக்கு தெரியாம அப்ப சாப்பிட்ட கருப்பட்டி மிட்டாயோட இனிப்பு, இத்தனை வருடத்திற்கு பிறகு முதல் முறையாக கசந்தது.அப்பவும் சரி,இப்பவும் சரி எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து,எதாவது விசேஷ வீட்டுல பார்த்தாலும்,
டிசம்பர் 5 ரொம்ப நாளாவே தள்ளி போயிட்டு இருந்த எங்க பெரிய அண்ணன் பிரகாஷ் [பெருசு] ஒரு வழியா திருமணம்,பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது தான்.இந்த கல்யாணத்தை பொறுத்த வரை,மண்டபம் பிடிச்சி,பத்திரிகை கொடுத்து, பந்தக்கால்,வாழைமர தோரணம் நடுறதுல இருந்து,பந்தி பரிமாறி, மண்டபத்தை காலி பண்ணி வீட்டுக்கு வந்து பால் பழம் சாப்டுற வரைக்கும், வேளை பெண்ட் கலண்டுருச்சு.இதற்க்கு நடுவில் Bachular பார்ட்டியை தலைமை தாங்கி,பிரச்னை இல்லாமல் நடத்தி வைத்தது தான் பெருங்கொடுமை.அதனால் என்ன, பெருசு தாலி கட்டுறப்ப வந்த "ஆனந்த கண்ணீர்" என்னோட எல்லா களைப்பையும் துடைத்து.யப்பா முதல்ல நாங்களா நடத்துன கல்யாணத்தை விட, இந்த கல்யாணத்துல, தான் படுத்திவிட்டார்கள. சாவியோட வாஷிங்டனில் திருமணத்தில் சம்பந்தி சண்டைன்னு ஒரு பகுதி வருமே, அந்த மாதிரி எல்லாம் எதாவது நடந்துட கூடாதுன்னு, ரொம்பவே மெனக்கெட வேண்டியாதாக இருந்தது.எத பண்ணலும் ஒரு பத்து அறிவுரைகள் வந்து விழுகுது.ஒரு வழியாக நல்லா படியாக முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
இத்தனை வருஷம்,பெரியவங்க எதாவது படிக்க சொல்லுவாங்க.நானும் ஏதோ படித்து முடித்து விட்டேன்.இப்ப தான் முதல் முறையாக சுயமாக யோசித்து,இந்த டிசம்பரில் தான் MA JOURNALAISAM AND MASS COMMUNICATION படிப்பிற்கு விண்ணப்பித்து உள்ளேன்.படித்தால்,வேளை கிடைக்குமா,நிறைய மார்க் எடுக்கனும்ங்றது போன்ற எந்த தொல்லையும் இல்லாம,மனசுக்கு பிடித்த படிப்பை புரிந்து படிக்கலாம்ன்னு முடிவு செய்து இருக்கேன்.பாப்போம்.
டிசம்பர் 18 சிறப்பான நாளாக அமைந்தது.அலுவலுக்கிடையில் டென்சனை குறைப்பதற்கு, நிறைய வலி இருக்கு.அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது ட்விட்டர் தான்.அந்த நண்பர்களை சந்தித்தேன்.@karna_sakthi @rajanleaks @kmsekar2003 @rammyramni @DKCBE . சிறப்பாக இருந்தது அந்த சந்திப்பு.அப்புறம் புத்தக வாசிப்பு என்பது,என் மட்டில் சுஜாதா புத்தகங்கள் மட்டும் தான் என்று எண்ணி கொண்டிருந்த எனக்கு,விகடன் மூலம் அறிமுகமான திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை, படிக்க ஆரம்பித்ததும், எனது பார்வையை மாற்றி கொண்டேன்.அவரை நேரில் சந்தித்தது,கையெழுத்து வாங்கியது மகிழ்ச்சியான தருணம்.
அப்புறம் வழக்கம் போல, என்னோட கிரிக்கெட் டீம்ல இந்த வருட தொடக்கத்தில், துவக்க ஆட்டகாரராக களமிறங்கிய என்னை,என்னுடைய "சிறப்பான பார்ம்" காரணமாக இப்போது ஐந்தாவது ஆட்டகாரராக களமிறக்குகிறார்கள்.அது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.சரி பண்ணனும்.பார்க்கலாம்.
வருடம் முழுவதும் என் இம்சையை தொடர்ந்து தாங்கி கொண்டிருக்கும் எனது அண்ணன் மதன் குமார் அவர்களே, உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறி கொள்ள விரும்புகிறேன்.அப்படி தான் தொடந்து இம்சையை கொடுப்பேன். உன்னால முடிஞ்சத பண்ணிக்கோ அண்ணா.
வாழ்கைன்னா இன்பம் துன்பம் கலந்தது அப்படிங்கற வசனத்தை சினிமால பார்த்துருக்கேன்.படிச்சு இருக்கேன்.ஆனா அப்படியே கண்ணு முன்னாடி ஓட்டி காமிச்சது இந்த வருடம் தான்.என் வாழ்கையில் மறக்க முடியாத வருடமாக நிறைந்துவிட்ட இந்த வருடத்தை,இனி வர போகும் வருடங்களுக்கான ட்ரைலர் ஆக தான் பார்க்க முடிந்தது.
புத்தாண்டு சபதம் என்றால் அம்மாகிட்ட கோபப்பட்டு உண்ணாவிரதம் இருக்கிறத, இந்த வருடத்தில் இருந்து நிறுத்தனும்.பசி தாங்க முடியிறது இல்ல.
என் நண்பன் பிரபுவை பற்றி ஒரு சிறு அறிமுகம்.நானும் அவனும் ஆறாவதில் இருந்து பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம், சாரி பள்ளிக்கு சென்றோம். எங்க ரெண்டு பேரையும் பிரிக்கிறது தான் எங்களோட ஆசிரியர்களோட முதல் வேளை.அப்படி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா பாடம் எடுக்கவே விட மாட்டோம்.செம ரகளையா இருக்கும்.வகுப்புக்கு உள்ள ரெண்டு பேரும் உக்காந்து இருந்தத விட, வெளிய முட்டி போட்டுட்டு தான் அதிக நேரம் இருப்போம்.ஒண்ணா சேர்ந்து கட் அடிச்சுட்டு படத்துக்கு போய், வகுப்பாசிரியரிடம் கையும், களவுமா சிக்கி, அப்புறம் எப்படியோ முட்டி முட்டி படிச்சு, கடைசியில, ரெண்டு பேரும் பாஸ் ஆகி நான் +1 சேர்ந்துட்டேன். என் நண்பன் டிப்ளமோ சேர்ந்து விட்டான்.அப்புறம் நான் "கலைஅறிவியலில்" சாதனை செய்ய முடிவெடுக்க,அவன் பொறியியலில் இறங்கி விட்டான்.எங்கள் நட்பில் சிறிய இடைவேளை.இருந்தாலும் இருவரும் கிடைக்கும் சமயங்களில் நட்பை பேணி பாதுகாத்து வளர்த்து வந்தோம்.மார்ச் மாத தொடக்கத்தில், வேறு ஒரு நண்பனிடமிருந்து வந்தது அந்த கைபேசி அழைப்பில் "மச்சான், நம்ம பிரபுவுக்கு ஷாக் அடிச்சு ICUல இருக்கான்.ரொம்ப சீரியஸ்" என்றது அந்த அழைப்பு. கண்ணாடி ரூம்ல இருந்த அவனை பார்த்துட்டு வந்த இரண்டொரு நாளில், அதாவது "மார்ச் 3 " எங்கள் நண்பன் இறந்துட்டான்.எப்பவுமே திட்டிட்டு இருக்குற அவங்க அப்பா "சிங்கம் மாதிரி சுத்திட்டு இருந்தவன எமன் தூக்கிட்டு போயிட்டானே" என்று அழுததை பிரபு கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. அந்த காட்சி கணமும் என் நெஞ்சில் இருக்கிறது.இப்பவும் என் மொபைல்ல இருக்குற அவன் நம்பர் என்னை நட்போட தான் பார்த்துட்டே இருக்கு.நானும் தான்.என் பள்ளி பருவத்தை இனிமையாக்கியவனே, I MISS YOU மச்சான்.
இப்படி 2011 ஏப்ரல் வரைக்கும் கடுப்பா தான் போயிட்டு இருந்தது.ஏதோ தூங்க வேண்டியது,எந்திரிக்க வேண்டியது,பெட்டி தட்ட வேண்டியதுன்னு போய்கிட்டு இருந்த வாழ்க்கையில திடீர்ன்னு புயல் வீசியது.புயல்னாலே என்ன? காதல் விவகாரம் தான்.நண்பரோட காதல் "எப்படியோ" பொண்ண பெத்தவங்க வீட்டுல தெரிஞ்சு, பொண்ணு வீட்டுல பிரச்சனை. அப்புறம் என்ன, ஒரு மாசமா பிளான் பண்ணி, மே 30 சுபயோக தினத்தன்று திங்கள் காலை திருமணத்தை நடத்தி வைத்தோம்.இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மாலை வாங்குறதுல இருந்து, சார் பதிவாளர் அலுவலகத்துல பதிவு பண்ற வரைக்கும்,எல்லாத்தையும் கூட இருந்து கவனிச்சதால ஒரு கல்யாணத்த முடிக்கிறது எவ்ளோ பெரிய கஷ்டம்ன்னு தெரிந்தது. இதெல்லாம் விட பெரிய விஷயம் அந்த பொண்ணுக்கு ஒரு அண்ணன்காரன் சார் இருந்தாரு.அவரு எப்ப வேணாலும் பிரச்னை பண்ணுவாருன்னு மாப்ள சொல்லி இருந்ததால், அவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு பத்து நாளைக்கு அப்புறமும் கூட ஒரே படப்பிடிப்பாக தான் இருந்தது. நல்ல வேளை எதிர்பாத்த மாதிரி எந்த பிரச்சனையும் இல்லாம சுமுகமாக இரு வீட்டாரும் பேசி தீர்த்து விட்டார்கள்.அப்புறம் ஆகஸ்ட்ல வரவேற்பு வைச்சு கல்யாண விருந்து வைத்தார்கள்.என்னோட இத்தனை வருஷ சர்வீஸ்ல சினிமால மட்டுமே பார்த்துட்டு இருந்த சீனை எல்லாம்,முதல் முறையா என் வாழ்கையில் ஒட்டி காமிச்ச அந்த ஆதர்சன தம்பதிகளுடன் விழாக் கமிட்டியினர்.
அக்டோபர் 2 ஞாயிறு மதியம் ஒரு காட்டுக்குள்ள வழக்கம் போல கிரிக்கெட் ஆடிகொண்டிருந்தேன்.அப்ப வீட்டுல இருந்து கூப்பிட்டு, இன்னொரு சோகமான செய்திய சொன்னாங்க.மனோகர் மாமா தவறிட்டாங்க.எப்படியோ கடைசி பஸ்ஸ புடிச்சி, கோவில்பட்டி போற வரைக்கும், ஒண்ணுமே விளங்கல. என்னடா மாமா நல்லா தான இருந்தாருங்கற வரைக்கும் இருந்த மனநிலை,அவரு இப்ப இல்லைங்கரத ஏத்துக்கவே முடியல. கோவில்பட்டி நெருங்கவும் சுப்பையாதேவர் மிட்டாய்கடை என் கண்ணில் பட்டது.எனக்கு ஒரு நாலு வயசு இருக்கும்.அப்ப நாங்க கோவில்பட்டியில தான் இருந்தோம்.தெருமுனைல இருக்கிற பிள்ளையார் கோவில் தான் எனக்கு விளையாடுற இடம்.இரவு எட்டு மணி போல ,எங்க மாமா அலுவலகம் முடிச்சுட்டு அந்த வழியா தான் வருவாரு.நான் கேட்காமலே,தினமும் அம்பது காசு தந்துட்டு தான் போவாரு.சுப்பையாதேவர் மிட்டாய் கடையில, அம்மாக்கு தெரியாம அப்ப சாப்பிட்ட கருப்பட்டி மிட்டாயோட இனிப்பு, இத்தனை வருடத்திற்கு பிறகு முதல் முறையாக கசந்தது.அப்பவும் சரி,இப்பவும் சரி எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து,எதாவது விசேஷ வீட்டுல பார்த்தாலும்,
இது மட்டும் தான் எங்களுக்குள் இருந்த உரையாடல்கள்.ஆனா இவரு தான் என் பால்ய கால கனவு நாயகன்.அம்மாகிட்ட கூட சொல்லுவேன், நான் பெரியவனாகி மாமா மாதிரி ஆபீஸ் போவேன்.நைட் தான் வருவேன்.நைட் லேட்டா வந்ததுக்கு அடிக்க மாட்டல்லன்னு கேப்பேன்.என்ன சொல்றது இதோட ரெண்டாவது துக்கமான சம்பவம்.நல்லா இருக்கியா?
நல்லா இருக்கேன் மாமா.
நல்லா படிக்கிறியா?
வேளை எல்லாம் எப்படி இருக்கு?
நல்லா போகுது மாமா?
டிசம்பர் 5 ரொம்ப நாளாவே தள்ளி போயிட்டு இருந்த எங்க பெரிய அண்ணன் பிரகாஷ் [பெருசு] ஒரு வழியா திருமணம்,பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது தான்.இந்த கல்யாணத்தை பொறுத்த வரை,மண்டபம் பிடிச்சி,பத்திரிகை கொடுத்து, பந்தக்கால்,வாழைமர தோரணம் நடுறதுல இருந்து,பந்தி பரிமாறி, மண்டபத்தை காலி பண்ணி வீட்டுக்கு வந்து பால் பழம் சாப்டுற வரைக்கும், வேளை பெண்ட் கலண்டுருச்சு.இதற்க்கு நடுவில் Bachular பார்ட்டியை தலைமை தாங்கி,பிரச்னை இல்லாமல் நடத்தி வைத்தது தான் பெருங்கொடுமை.அதனால் என்ன, பெருசு தாலி கட்டுறப்ப வந்த "ஆனந்த கண்ணீர்" என்னோட எல்லா களைப்பையும் துடைத்து.யப்பா முதல்ல நாங்களா நடத்துன கல்யாணத்தை விட, இந்த கல்யாணத்துல, தான் படுத்திவிட்டார்கள. சாவியோட வாஷிங்டனில் திருமணத்தில் சம்பந்தி சண்டைன்னு ஒரு பகுதி வருமே, அந்த மாதிரி எல்லாம் எதாவது நடந்துட கூடாதுன்னு, ரொம்பவே மெனக்கெட வேண்டியாதாக இருந்தது.எத பண்ணலும் ஒரு பத்து அறிவுரைகள் வந்து விழுகுது.ஒரு வழியாக நல்லா படியாக முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
இத்தனை வருஷம்,பெரியவங்க எதாவது படிக்க சொல்லுவாங்க.நானும் ஏதோ படித்து முடித்து விட்டேன்.இப்ப தான் முதல் முறையாக சுயமாக யோசித்து,இந்த டிசம்பரில் தான் MA JOURNALAISAM AND MASS COMMUNICATION படிப்பிற்கு விண்ணப்பித்து உள்ளேன்.படித்தால்,வேளை கிடைக்குமா,நிறைய மார்க் எடுக்கனும்ங்றது போன்ற எந்த தொல்லையும் இல்லாம,மனசுக்கு பிடித்த படிப்பை புரிந்து படிக்கலாம்ன்னு முடிவு செய்து இருக்கேன்.பாப்போம்.
டிசம்பர் 18 சிறப்பான நாளாக அமைந்தது.அலுவலுக்கிடையில் டென்சனை குறைப்பதற்கு, நிறைய வலி இருக்கு.அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது ட்விட்டர் தான்.அந்த நண்பர்களை சந்தித்தேன்.
அப்புறம் வழக்கம் போல, என்னோட கிரிக்கெட் டீம்ல இந்த வருட தொடக்கத்தில், துவக்க ஆட்டகாரராக களமிறங்கிய என்னை,என்னுடைய "சிறப்பான பார்ம்" காரணமாக இப்போது ஐந்தாவது ஆட்டகாரராக களமிறக்குகிறார்கள்.அது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.சரி பண்ணனும்.பார்க்கலாம்.
வருடம் முழுவதும் என் இம்சையை தொடர்ந்து தாங்கி கொண்டிருக்கும் எனது அண்ணன் மதன் குமார் அவர்களே, உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறி கொள்ள விரும்புகிறேன்.அப்படி தான் தொடந்து இம்சையை கொடுப்பேன். உன்னால முடிஞ்சத பண்ணிக்கோ அண்ணா.
வாழ்கைன்னா இன்பம் துன்பம் கலந்தது அப்படிங்கற வசனத்தை சினிமால பார்த்துருக்கேன்.படிச்சு இருக்கேன்.ஆனா அப்படியே கண்ணு முன்னாடி ஓட்டி காமிச்சது இந்த வருடம் தான்.என் வாழ்கையில் மறக்க முடியாத வருடமாக நிறைந்துவிட்ட இந்த வருடத்தை,இனி வர போகும் வருடங்களுக்கான ட்ரைலர் ஆக தான் பார்க்க முடிந்தது.
புத்தாண்டு சபதம் என்றால் அம்மாகிட்ட கோபப்பட்டு உண்ணாவிரதம் இருக்கிறத, இந்த வருடத்தில் இருந்து நிறுத்தனும்.பசி தாங்க முடியிறது இல்ல.
என் இனிய நண்பர்களே,சொந்தங்களே,பந்தங்களே
.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்