Wednesday, April 21, 2010

அன்பளிப்பு

பொதுவா மனிதர்களிடத்தில் அன்பை பிரதிபலிப்பதற்கு என்று வைத்திருக்கும் வழிகள் பல இருந்தாலும் அதில் அன்பளிப்பு என்ற வழி தான் பெரும்பாலும் பின்பற்றபடுகிறது என்பது என் தாழ்மையான கருத்து. கொடுக்கிற அன்பளிப்பு வாங்குறவங்களுக்கு உபயோகமா இருக்கணும்கறது தான் எல்லாரோட நினைப்பா இருக்கும். மச்சி இந்த மாதிரி என்கிட்ட நாலு இருக்கு.  ஐயோ சாரி டி எனக்கு இந்த கலர் பிடிக்காதே. இந்த மாதிரி எல்லாம் உங்க நண்பர்கள் உங்ககிட்ட கண்டிப்பா கேட்டு இருப்பாங்க.அந்த நேரம் மிகவும் தர்மசங்கடமா இருக்கும்.  அதை தவிர்பதற்க்கு அவங்க கிட்ட எது இல்லையோ அத கொடுதொம்ன்னா அவங்களும் சந்தோஷ படுவாங்க.நமக்கும் ஒரு திருப்தி கிடைக்கும் இல்லையா!




என்னிடம் இல்லாத நான் விரும்பும் பொருட்கள்:-

  1. சுஜாதா வின் "வசந்த குமாரனும் கணேஷ பட்டரும்" புத்தகம் நீண்ட நாட்களாக தேடி கொண்டிருக்கிறேன்.[இதுக்காவே திருச்சி பழைய புத்தக கடைகளுக்கு போய் தேடலாம்ங்க்றது என் நீண்ட நாள் ஐடியா. திருச்சி நண்பர்கள் கவனிக்கவும்]
  2. ஷாருக்கான் உடைய தேசம் பட DVD . இந்த படம் பாத்துட்டேன் ஆனா ஹிந்தில[SWADESH] தான் பாத்திருக்கேன்.தமிழ்ல ஷாருக்கிற்கு SPB தான் டப்பிங்.ரொம்ப நல்லா இருக்கும்ன்னு  சொல்ல கேட்டு இருக்கேன்.வாங்கி பாக்கணும்.  
  3. அப்புறம் இசைன்னா எல்லாத்தையும் மாதிரி எனக்கும் ரொம்ப இஷ்டம்.ஆனா இப்ப அத  ரசிக்கறதுக்குல ஒரு சின்ன கஷ்டம். ஆமா என்னோட கைபேசில பாட்டு கேக்குற வசதி இல்ல.அதனால MP3 WITH MEMORY CARD வசதி உள்ள ஒரு கைபேசி அல்லது SONY IPOD . 
  4.  ஆளாளுக்கு அவங்க ஆள்க்கு குறுந்தகவல் அனுப்பிட்டு இருக்கிறப்ப நான் மட்டும் சும்மா இருப்பேன்.அதனால குறுந்தகவல் அனுப்பறதுக்கு ஒரு நல்ல குணமுள்ள, பண்பான,அழகான பெண்ணின் கைபேசி எண்.
  5. Apache மஞ்சள் கலர் துள்ளுந்து . [அப்புறம் அந்த பொண்ண வெளில அழைச்சுட்டு போறதுக்கு வண்டி வேணாம்.]
 அவ்ளோ தாங்க என்னோட தேவைகள். இதுக்கு மேல உங்கள நான் கஷ்டபடுத்த விரும்பல.எதுக்குடா சம்பந்தமே இல்லாம இதெல்லாம் சொல்றேன்னு பாக்குறேங்களா. இன்னும் கொஞ்ச நாள்ல என்னோட பிறந்த நாள் மே 1 வருது.அதனால தான். எனக்கு அன்பளிப்பு தர நினைக்கும் நண்பர்கள்,தோழியர்கள், கடைக்கு செல்லும் முன் இந்த லிஸ்டை அச்சிட்டு [PRINTOUT] செல்லுமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.

மறந்து விடாதீர்கள் மே முதல் தேதி.தேவை இல்லாமல் உருவாகும் வீண் தர்ம சங்கடத்தை தவிர்க்கவும். 

பின் குறிப்பு:-
இது எதையுமே அன்பளிப்பா கொடுக்காம ஒரு குறுந்தகவல், ஒரு  மின்னஞ்சல், அட ஒரு பின்னுட்டம், ஒரு கால் பண்ணி வாழ்த்து சொன்ன கூட எந்த தர்ம சங்கடமும் எனக்கு ஏற்படாது எனவும், நான் இந்த வாழ்த்திற்கே மிகவும் மகிழ்வேன் என  தெரிவித்து கொள்கிறேன்.

3 comments:

  1. என்னப்பா.. பிறந்தநாள் வருதா.? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே...!!! ஹ்ம்ம்.... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் முன்கூட்டியே...

    ReplyDelete
  2. என்ன சரவணா? எக்கச்சக்கமா பரிசுகள் அன்பளிப்புகள் குவிஞ்சுருச்சு போலிருக்கே? ரொம்ப tired ஆயிட்டியா பிரிச்சு பார்த்து பார்த்து? எப்படி போச்சு பிறந்தநாள்.?

    ReplyDelete
  3. ஒரு 2 பொண்ணுக கைபேசி எண், தேசம் cd நண்பர்கள் கொடுத்துடாங்க

    ReplyDelete

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!