ஒஷோவிடமிருந்து நான் தெரிந்து கொள்வது என்பது புன்னகையோடு எதிர்கொள்ளப்படும் ஒரு மரணமென்பது நம் அறுபதாண்டுகால வாழ்க்கையைவிட அர்த்தச்செறிவுள்ளது. இனி ஓஷோ ஜோக்ஸ்
1.கடலில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனை தாய் கண்டிக்கிறாள்..
“ ஏய் சனியனே! உங்கிட்ட எத்தனை தடவ சொல்றது கடல்ல விளையாடக்கூடாதுன்னு”
’ஏம்மா’
”கடல் அலை உன்னைக் கொண்டுப்போயிரும்”
”அப்பா மட்டும் விளையாடுறார்”
”அவரு ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி வச்சிருக்கிறார்”
2.பிரிவுத்துயரில் வாடும் தன் காதலிக்கு காதலன் எழுதும் கடிதம்.
அன்பே பிரிவைப் பற்றி கவலைகொள்ளாதே.இது தற்காலிகமானது.இந்த உலகமே நம்மை எதிர்த்தாலும் சரி. அந்த வானமே இடிந்து விழுந்தாலும் சரி.அந்த கடலைகளே கரைதாண்டி வந்தாலும் சரி,நீயும் நானும் இணைவதை யாராலும் தடுக்க இயலாது.எவ்வளவு இடரையும் எதிர்த்து உன்னைக் கரம் பிடிப்பேன்.இது நம் தூய்மையான உறுதியான காதலின் மீது ஆணை.
இப்படிக்கு ஆயிரம் முத்தங்களுடன் உன் அன்புக்காதலன்.
பின் குறிப்பு : வரும் வெள்ளியன்று இடி,மின்னல்,மழை வராமல் இருந்தால் நிச்சயம் உன்னைச்சந்திக்கிறேன்.
3. பாதிரியார்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆசிரியர் :
”மாணவர்களே சுவர்க்கத்தைப் பற்றி நீங்கள் பிரசங்கிக்கும்போது உங்கள் முகம் பிரகாசமாக இருக்கட்டும்.உங்கள் கண்களானது நிறைந்த ஒளி கொள்ளட்டும்.உங்கள் குரல் மென்மையாக தெளிவாக ஒலிக்கட்டும். உங்களின் வார்த்தைகள் இனிக்கட்டும்.உங்கள் புன்னகைகள் மலர்ந்து மனம் வீசட்டும்.”
அப்போது திடீரென்று ஒரு மாணவன் எழுந்து “ நரகத்தைப் பற்றி பேசும்போது, என்ன செய்வது?”
ஆசிரியர், ”நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம்.இப்படியே உங்கள் முகம் சாதாரணமாகயிருந்தால் போதுமானது”.
Oh...... very nice.. i laught a lot... keep posting like this...
ReplyDeletewelldone saravana.....