எங்கள் அனைவருக்கும் முதலில் சிறிது ஏமாற்றமாக தான் இருந்தது.+2 தேர்வு முடிவுகள் வெளியான அன்று காலை 10 மணி சிறப்பு செய்திகளில் பாண்டியன் என்ற மாணவன் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற செய்தியை பார்த்ததும். ஆமாம் எல்லோரும் முதல் ஆளா வர்ரதுங்குறது நடைமுறைக்கு சாத்தியம் இல்ல தான்.என் தம்பி கெளதம்[எனது இரண்டவாது பெரியம்மாவின் இரண்டாவது பிள்ளையின் மூத்த மகன் கெளதம் [சுருக்கமா அக்கா பையன்]]ஒரு 300 கிலோமீட்டர் தூரம் என்றாலும் (கோவில்பட்டி,மதுரைக்கு அருகில்) எனக்கு நெருக்கமானவர்கள் தான்.] பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தான்.
கெளதம் செல்வகுமார்
மதிப்பெண் பட்டியல்
ரைட் கிளிக் செய்து view image பார்க்கவும் .
பாண்டியனின் மதிப்பெண்ணில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்றாலும் கௌதமிடமிருந்து நாங்கள் நிறைய எதிர்பார்த்தோம்.அந்த ஏமாற்றமும் சிறிது நேரத்தில் காணமல் போனது. எனது தம்பி கெளதம் தேர்வு முடிவை பார்த்ததும். ஏன் எனில் அவனும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரன் ஆகி இருந்தான்.கடந்த நூறு ஆண்டு கால குடும்ப வரலாற்றில்,இதுவரை +2 தேர்வு எழுதிய 76 அன்பு [அந்த 76 இல் நானும் ஒருத்தனுங்க] சொந்தங்களையும் பின்னுக்கு தள்ளி +2 தேர்வில் 1122 மதிப்பெண்கள் பெற்று குடும்பதிலயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளான்.என்ன டா இவ்ளோ 76 பேரா +2 முடிசுருக்காங்கன்னு நினைக்காதீங்க.ஒரு 50 பேர் +2 வரைக்கும் படிக்கல. ஒரு 30 பேர் +2 எழுதுறதுக்கு தயாரா இருக்காங்க.கொஞ்சம் பெரிய குடும்பம் அவ்ளோ தான்.ஆமா அம்மாவுக்கு மொத்தம் ஏழு அக்கா,ஒரு அண்ணன்,இரண்டு தம்பி. ஆக மொத்தம் பெரியம்மா பசங்க,பொண்ணுக [அக்கா,அண்ணணுக], அது போக அவங்க பசங்க,பொண்ணுகன்னு கூட்டி,கழிச்சு பாருங்க.[கலைஞர் கிட்ட தனி மாநில கோரிக்கை வைக்கலாம்ன்னு இருக்கோம்.]கணக்கு சரியா வரும்.ஆக இது கூட ஒரு மிக பெரிய சாதனை தான்.
தம்பியின் இந்த சாதனையை மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.தம்பியின் ஆவல் படி அவனின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துவது அன்பில் அண்ணன் சரவணன.
வாழ்த்துக்கள் கெளதம் செல்வகுமார்.... இன்னும் நிறைய படித்து நிறைய சாதிக்கணும்...
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்......