Saturday, August 21, 2010

கவிப்பேரரசு


1. கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவம் நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?
இரவோடு நான் காணும் ஒளி வட்டம் நீதான்!
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சிதான்!
வார்த்தைக்குள் உள்ளாடும் உயிரோட்டம் நீதான்!
என் வாக்கியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்!
தூரத்தில் மயிலிறகாய்த் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்!
காதலுக்குக் கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்தால் கண்மூடிக்கொண்டவளும் நீதான்!

vairamuthu.jpg


2. சத்தத்தினால் உண்ட பித்தத்தினால்
காதல் யுத்ததினால் எனது ரத்ததினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி.
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி.
கண் பார்த்ததும், கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும், தள்ளிப்பின் பார்த்ததும்
சுட்டாலும், மறக்காது நெஞ்சம்.
முற்றும் சொன்னத்தில்லை தமிழுக்கு பஞ்சம்.
கண்டிப்பதால், என்னை நிந்திப்பதால்,
நெஞ்சை தண்டிப்பதால், தலையை துண்டிப்பதால்,
தீராது என் காதல் என்பேன்.
நீ தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.
உம் என்று சொல், இல்லை நில் என்று கொல்.
என்னை வாவென்று சொல் இல்லை போவென்று கொல்.
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்.
நீ இல்லை என்றால் ஈடுகாடு பக்கம்.

Friday, August 20, 2010

ஓஷோ

மூச்சு திணறினாலும்…. இதமான சூட்டில்..

 
குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது.
குளிர்காலம் வந்தது . குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்தது. அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது.
அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது.
சிட்டு குருவிக்கு மூச்சு திணறினாலும் அந்த சாணத்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. சூட்டினாலும் , மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது.
அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையைக் கண்டது. சாணத்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது.
ஓஷோ சொல்கிறார்
இந்த கதையில் மூன்று கருத்துக்களை காணலாம்.
ஒன்று ; உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டு: உன்னை சாணத்திலிருந்து அகற்றுபவன் உன் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
மூன்று: நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால், உன் வாயை மூடிக் கொண்டிரு.
———————————————————————

Monday, August 16, 2010

போலீசும் நானும்

police.jpg

                என்னோட கல்லுரி காலத்துல என்னோட "பை" செலவுக்கு [பாக்கெட் மணி] கிடச்ச சின்ன சின்ன வேலை எல்லாம் நண்பர்களோட சேர்ந்து செய்த நாட்களில், மிகவும் கஷ்டப்பட்டு செய்த வேலை போஸ்டர் ஒட்டினது. கஷ்டபட்டதுக்கு காரணம் இத படிச்சதுக்கு அப்புறம் உங்களுக்கே புரியும். நாங்க ஒட்டின  சுவரொட்டி வேலை வாய்ப்பை பற்றியது.1000 போஸ்டர் ஓட்டினால் 1500 ரூபாய். நாங்க மூனு பேரு இந்த வேலைக்கு கமிட் ஆனோம்.

               1400 போஸ்டர் ஓட்டிட்டோம். கடைசி நூறு தான கிழிச்சு வீசிடலாம்ன்னு இரண்டு பேரு சொன்னோம்.ஒருத்தன் மட்டும் கடமை தவறாம அதையும் ஒட்டிடலாம்ன்னு சொன்னத கேட்டோம். மெயின் பஸ் ஸ்டாண்டுல ஓட்டினா இன்னும் நிறைய பணம் தருவாங்கன்னு அவன் பேச்ச கேட்டு அங்க போனோம் அதிகாலை 4 மணிக்கு.நாங்க வேலை செய்து கொண்டு இடுந்த போது அந்த அசம்பாவிதம் நடந்தது.

                 திடீர்ன்னு என் முதுகில் என்னமோ நெருட, திரும்பி பார்த்தா அனுமதி இல்லாம போஸ்டர் ஒட்டியதற்காக துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டோம்.நேராக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டோம்.எங்கள் மீது வழக்கு பதிவு செய்து இருந்தால்  கூட வெறும் 150 ரூபாய் அபாரதத்தோடு வெளிய வந்து இருப்போம். அத பண்ணாம என் கைபேசிய பிடுங்கி வச்சுகிட்டாரு.அந்த 600 ரூபாய் மொபைல் வாங்குறதுக்காக  அந்த காவலருக்கு 200 ரூபாய்க்கு mobile recharge  பண்ணி விட்டு,இன்னும் இரண்டு பேருக்கும் தலா 100 ரூபாய் பணம் கொடுக்க வேண்டியதா போச்சு.கடைசில அந்த மொபைல் எனக்கு தர்றதுக்கு அவங்களுக்கு ஒரு வாரம் ஆச்சு.இவ்ளோ கஷ்டபட்டது  என்னோட சிம்கார்ட்-ல இருக்கிற எண்களுக்காக தான்.

                 இந்த சம்பவத்துக்கு அப்புறம் நாங்க அந்த மாதிரி வேலை எல்லாம் செய்யாம இருந்தோம்.திருப்பி வேறு ஒரு நாள் அதே மூனு பேரும் புது வருட பிறப்பிற்கு தேவாலயத்திற்கு புறப்பட்டோம் இரு சக்கர வாகனத்தில்.அப்ப மணி 11 .45 PM.  எங்க நேரதுக்குன்னே, போக்குவரத்து காவலரிடம் வண்டியும்,சாவியுமா மாட்டினோம்.எவ்ளவோ போராடியும் தலைக்கு    நூறுன்னு மொத்தம் 300 ரூபாய் போச்சு. எந்த ரசீதும் இல்லாம அவருக்கு நாங்க புதுவருட காசு கொடுத்துட்டு வந்தோம். இதுல இருந்து என் மனசுல ரொம்ப நாளா ஒரு கேள்வி அறிச்சுகிட்டே இருக்கு.அது என்னன்னா



இந்த மாதிரி போலீஸ் எல்லாம் 50 ரூபாய் கொடுத்து சினிமால மட்டும் தான் பார்க்க முடியுமா? நிஜ வாழ்கையில் எல்லாம் என்னோட வாழ்கையில் பார்த்த மாதிரி தான் இருக்காங்க. இந்த அநியாத்தை தட்டி கேக்க யாருமே இல்லையா.?