Monday, August 16, 2010
போலீசும் நானும்
என்னோட கல்லுரி காலத்துல என்னோட "பை" செலவுக்கு [பாக்கெட் மணி] கிடச்ச சின்ன சின்ன வேலை எல்லாம் நண்பர்களோட சேர்ந்து செய்த நாட்களில், மிகவும் கஷ்டப்பட்டு செய்த வேலை போஸ்டர் ஒட்டினது. கஷ்டபட்டதுக்கு காரணம் இத படிச்சதுக்கு அப்புறம் உங்களுக்கே புரியும். நாங்க ஒட்டின சுவரொட்டி வேலை வாய்ப்பை பற்றியது.1000 போஸ்டர் ஓட்டினால் 1500 ரூபாய். நாங்க மூனு பேரு இந்த வேலைக்கு கமிட் ஆனோம்.
1400 போஸ்டர் ஓட்டிட்டோம். கடைசி நூறு தான கிழிச்சு வீசிடலாம்ன்னு இரண்டு பேரு சொன்னோம்.ஒருத்தன் மட்டும் கடமை தவறாம அதையும் ஒட்டிடலாம்ன்னு சொன்னத கேட்டோம். மெயின் பஸ் ஸ்டாண்டுல ஓட்டினா இன்னும் நிறைய பணம் தருவாங்கன்னு அவன் பேச்ச கேட்டு அங்க போனோம் அதிகாலை 4 மணிக்கு.நாங்க வேலை செய்து கொண்டு இடுந்த போது அந்த அசம்பாவிதம் நடந்தது.
திடீர்ன்னு என் முதுகில் என்னமோ நெருட, திரும்பி பார்த்தா அனுமதி இல்லாம போஸ்டர் ஒட்டியதற்காக துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டோம்.நேராக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டோம்.எங்கள் மீது வழக்கு பதிவு செய்து இருந்தால் கூட வெறும் 150 ரூபாய் அபாரதத்தோடு வெளிய வந்து இருப்போம். அத பண்ணாம என் கைபேசிய பிடுங்கி வச்சுகிட்டாரு.அந்த 600 ரூபாய் மொபைல் வாங்குறதுக்காக அந்த காவலருக்கு 200 ரூபாய்க்கு mobile recharge பண்ணி விட்டு,இன்னும் இரண்டு பேருக்கும் தலா 100 ரூபாய் பணம் கொடுக்க வேண்டியதா போச்சு.கடைசில அந்த மொபைல் எனக்கு தர்றதுக்கு அவங்களுக்கு ஒரு வாரம் ஆச்சு.இவ்ளோ கஷ்டபட்டது என்னோட சிம்கார்ட்-ல இருக்கிற எண்களுக்காக தான்.
இந்த சம்பவத்துக்கு அப்புறம் நாங்க அந்த மாதிரி வேலை எல்லாம் செய்யாம இருந்தோம்.திருப்பி வேறு ஒரு நாள் அதே மூனு பேரும் புது வருட பிறப்பிற்கு தேவாலயத்திற்கு புறப்பட்டோம் இரு சக்கர வாகனத்தில்.அப்ப மணி 11 .45 PM. எங்க நேரதுக்குன்னே, போக்குவரத்து காவலரிடம் வண்டியும்,சாவியுமா மாட்டினோம்.எவ்ளவோ போராடியும் தலைக்கு நூறுன்னு மொத்தம் 300 ரூபாய் போச்சு. எந்த ரசீதும் இல்லாம அவருக்கு நாங்க புதுவருட காசு கொடுத்துட்டு வந்தோம். இதுல இருந்து என் மனசுல ரொம்ப நாளா ஒரு கேள்வி அறிச்சுகிட்டே இருக்கு.அது என்னன்னா
இந்த மாதிரி போலீஸ் எல்லாம் 50 ரூபாய் கொடுத்து சினிமால மட்டும் தான் பார்க்க முடியுமா? நிஜ வாழ்கையில் எல்லாம் என்னோட வாழ்கையில் பார்த்த மாதிரி தான் இருக்காங்க. இந்த அநியாத்தை தட்டி கேக்க யாருமே இல்லையா.?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!