Wednesday, November 24, 2010

சிகெரட் பிடிச்சா சில நல்ல விசயங்களும் இருக்குதுங்க!


எல்லாரும் சிகெரட் பிடிக்காத அது நிகோடின் இருக்குது... Cancer வரும் அது வரும் இது வரும் சொல்லுவாங்க. அது இருக்கட்டும் சிகெரட் பிடிக்கிறதால் சில நல்ல விசியங்களும் இருக்குங்க. என்னனு தெரிஞ்சிக ஆர்வமா இருக்கீங்களா படிச்சி தான் பாருங்களேன்.

இங்க நான் எனக்கு தெரிஞ்ச scientificaa prove பண்ணப்பட்ட 3 points மட்டும் சொல்லறேன்.
  1. உங்களுக்கு வயசே ஆகாது.
  2. உங்களுக்கு பெண் குழந்தையே பிறக்காது.
  3. உங்க வீட்டு பக்கம் திருடன் வரவே மாட்டன்.
என்ன? இதெல்லாம் நான் மட்டும் சொல்லலேங்க... Science கூட இததான் சொல்லுது. இத கேட்ட உடனே நீங்க சிகரெட் பிடிப்பவர இருந்த ரொம்ப சந்தோஷ படுவீங்க இல்லையா? சரி இதோட போயிராதீங்க! கொஞ்சம் கீழயும் படிங்க :)

முதல்ல , "உங்களுக்கு வயசே ஆகாது" - நீங்க சிகரெட் பிடிப்பவரா இருந்தா உங்களுக்கு வரக்கூடாத வியாதி எல்லாம் வந்து நீங்க சின்ன வயசுலயே பரலோகம் போயடுவேங்க. அதுக்கு அப்புறம் எங்கருந்து வயசறது.

ரெண்டாவதா, "உங்களுக்கு பெண் குழந்தையே பிறக்காது" நீங்க சிகரெட் பிடிப்பவர் என்றால் உங்கள் விந்துவில் குறை ஏற்பட்டு குழந்தையே பிறக்காதே பின்ன எங்க இருந்து பெண் குழந்தை?!

மூனாவதா, "உங்க வீட்டு பக்கம் திருடன் வரவே மாட்டன்" அதாவது சிகரெட் பிடிச்சா உங்களுக்கு இருமல் அடிக்கடி வரும். எப்போமே சத்தம் கேட்டகிற வீட்டுக்கு எந்த திருடனும் வர மாட்டேன்.

என்ன நான் சொல்லறது எல்லாம் சரி தானே?





இது மட்டும் இல்ல இன்னும் இதே மாதிரி நெறைய நல்ல விசியங்கள் சிகரெட் பிடிப்பதால் இருக்குது.

5 comments:

  1. முதல்ல கோபத்தோடே படிக்க ஆரம்பிச்சேன்... அப்புறம் தான் நிம்மதியானேன்....

    நல்லாருக்கு சொன்ன விதம்....

    புகைப்பிடிக்கிறவங்களுக்கு சாட்டையடி...

    ReplyDelete
  2. //என்ன நான் சொல்லறது எல்லாம் சரி தானே?//
    சந்தேகம் இல்லாம ரொம்ப சரி!

    ReplyDelete
  3. hello sir. solra neenga cigaratte pidipingalanu sollave illaye?

    ReplyDelete
  4. பிடிச்சேன்!! இப்ப கைவிட்டு ஆறு மாதங்கள் ஆகிறது!!

    ReplyDelete

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!