என்னிடம் இல்லாத நான் விரும்பும் பொருட்கள்:-
- சுஜாதா வின் "வசந்த குமாரனும் கணேஷ பட்டரும்" புத்தகம் நீண்ட நாட்களாக தேடி கொண்டிருக்கிறேன்.[இதுக்காவே திருச்சி பழைய புத்தக கடைகளுக்கு போய் தேடலாம்ங்க்றது என் நீண்ட நாள் ஐடியா. திருச்சி நண்பர்கள் கவனிக்கவும்]
- ஷாருக்கான் உடைய தேசம் பட DVD . இந்த படம் பாத்துட்டேன் ஆனா ஹிந்தில[SWADESH] தான் பாத்திருக்கேன்.தமிழ்ல ஷாருக்கிற்கு SPB தான் டப்பிங்.ரொம்ப நல்லா இருக்கும்ன்னு சொல்ல கேட்டு இருக்கேன்.வாங்கி பாக்கணும்.
- அப்புறம் இசைன்னா எல்லாத்தையும் மாதிரி எனக்கும் ரொம்ப இஷ்டம்.ஆனா இப்ப அத ரசிக்கறதுக்குல ஒரு சின்ன கஷ்டம். ஆமா என்னோட கைபேசில பாட்டு கேக்குற வசதி இல்ல.அதனால MP3 WITH MEMORY CARD வசதி உள்ள ஒரு கைபேசி அல்லது SONY IPOD .
- ஆளாளுக்கு அவங்க ஆள்க்கு குறுந்தகவல் அனுப்பிட்டு இருக்கிறப்ப நான் மட்டும் சும்மா இருப்பேன்.அதனால குறுந்தகவல் அனுப்பறதுக்கு ஒரு நல்ல குணமுள்ள, பண்பான,அழகான பெண்ணின் கைபேசி எண்.
- Apache மஞ்சள் கலர் துள்ளுந்து . [அப்புறம் அந்த பொண்ண வெளில அழைச்சுட்டு போறதுக்கு வண்டி வேணாம்.]
மறந்து விடாதீர்கள் மே முதல் தேதி.தேவை இல்லாமல் உருவாகும் வீண் தர்ம சங்கடத்தை தவிர்க்கவும்.
பின் குறிப்பு:-
இது எதையுமே அன்பளிப்பா கொடுக்காம ஒரு குறுந்தகவல், ஒரு மின்னஞ்சல், அட ஒரு பின்னுட்டம், ஒரு கால் பண்ணி வாழ்த்து சொன்ன கூட எந்த தர்ம சங்கடமும் எனக்கு ஏற்படாது எனவும், நான் இந்த வாழ்த்திற்கே மிகவும் மகிழ்வேன் என தெரிவித்து கொள்கிறேன்.