Monday, January 10, 2011

சனிக்கிழமை இரவு பீலிங்

பெரிய முதாலாளி ஆவதற்கு ஆக சிறந்த வழி, நல்ல பிகர் வீட்டு முன்னாடி பெட்டி கடை வைக்குறது தான்#எவ்ளோ தம் அடிக்கிறானுக

அழகாக அழும்,அழகான சிறு பெண் குழந்தைகளை காண நேரிடும் போது,பெரியவளாகி எத்தனை பேர அழ வைக்க போறியோன்னு மனசு நினைக்குது

நீ பிறந்த பிறகுதான் உன் அப்பாவுக்கே பெயர் வைத்தார்களா? அழகப்பன் என்று! யப்பா என்னா அழகு ப்பா #மாமனார் அப்டேட்ஸ்

அவளை நினைவுபடுத்துபவற்றை அழிக்க வேண்டுமானால், இந்த உலகத்தையே அழிக்கத்தான் வேண்டும்... #காதல்

காதலிக்க பெண்ணே கிடைக்காதவனும் காதலில் தோற்றவன்தான்இரவு நீண்டுகொண்டே இருக்கிறது, கையில் கொடுக்கவிருக்கும் காதல் கடிதம் # Dreams

காதலர் தினம் பிப்ரவரியில் வருவதால் தானோ,அந்த மாதத்திற்கு மட்டும் ஆயுள் குறைவு #உசார் மக்கள்'ஸ்ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு ஆணின் தோல்விக்கு பின்னாலும் ஒரு ஃபிகர்-தான் இருப்பாள்.. #நிதர்சனம்

கோவையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, பல மேம்பாலங்களை கட்ட தமிழக அரசு முடிவு#யாருக்கு என்ன பண நெருக்கடியோ

பெரியாரை விட மிகப் பெரிய நாத்திகர்கள்,ஐயப்பனுக்கு மாலை போட்டு புகை,தண்ணி அடிக்கும் ஆசாமிகள் தான்#சுவாமியே சரணம் ஐயப்பா

தொடர்ந்து வரும் மொக்கை குறுஞ்செய்திகளை படித்த உடன் அழிக்கும் பழக்கத்தால், சில நல்ல குறுஞ்செய்திகளும் என்னால் அழிக்கபடுகின்றன#அனுபவம்

விவாதம் முடிவுகளைத் திணிக்க முயலும் அமைதிப் போராட்டம் # Dont Argue With Others

காதல் சிற்றின்பங்களில் சிலாகிக்க வைத்து, பேரின்பத்தின் மீது பேரிடியாய் இறங்குகிறது#என்னது தண்ணி அடிக்க கூடாதுங்களா #கொடுமை

எந்த சண்டையும் சச்சருவுமின்றி போய் கொண்டு இருக்கிறது அவள் ஞாபகங்களோடு நான் நடத்தும் குடித்தனம்# One Side Love Feeling.

கதாநாயகர்கள் காதலிக்க வேண்டும் என்பதற்காகவே கதாநாயகிகள் குருடனுக்கு சாலை கடக்க உதவுகிறார்கள்,தர்மம் செய்கிறார்கள்#தமிழ் சினிமா

ஊர் தாகம் தீர்க்க இளநீர் விற்கும் பெருசு தன் தாகத்திற்கு டீ கடையில் தண்ணீர் இரவல் வங்கி குடிக்கிறது#முரண்

எல்லோரோட பிரச்சினையும் அவங்க அவங்க சம்பளத்த விட ஒரு ஜீரோ அதிகமா தான் இருக்கு #போதையில் நண்பன் சொன்னது

பத்தாம் வகுப்பிற்கு பொது தேர்வு அவசியம்.அப்போது தான் நமக்கு இன்னும் பல சச்சின்களும்,சினமா இயக்குனர்களும்,கிடைப்பார்கள்#ஹி ஹி நானும் பெயில்

உபயோகிப்பாளர்களின் உடல்நலனில் அக்கறை இல்லாத இரண்டே பேர் மது மற்றும் புகையிலை உற்பத்தியாளர்கள் #பீலிங்

மரணத்திற்கு பயப்படாதவர்கள் கூட மழைக்கு பயப்படுகிறார்கள். எல்லார் தலையிலும் ஹெல்மெட் மழை நாளின் போது #என்ன கொடுமை சார் இது

குவார்ட்டர் அடிச்சுட்டு மட்டை ஆகிறத விட கட்டிங் அடிச்சுட்டு புலம்பரதுல இருக்கிற சுகமே தனி என்று நண்பன் சொல்கிறான்!

நான் காதல் கொண்ட அனைத்தும் என்னை கைவிடப்பட்ட நிலையில்,தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்திதுவாய்டுங்களா #நாளைக்கு சனிக்கிழமை.