Monday, January 4, 2010

Who Am I

 யாரு இவரு? தெரிஞ்சா மின்னஞ்சல் பண்ணுங்க 



வயது வந்தவர்களுக்கு மட்டும்..

தயவு செய்து 18 வயதுக்கு குறைந்தவர்கள் இத்தளத்தைப் பார்வையிட வேண்டாம். பொறுமையை சோதிக்கும் தளம். தளத்திற்குள் நுழைந்ததும் ஏண்டா வந்தோம் என்று இருக்கும்.
நண்பர்களுக்கு மட்டுமல்ல, எதிரிகளுக்கும் பரிந்துரைக்கும் வசதியுடன் உள்ள இணைய தளம். விரும்பினால் இதுபோன்ற அனுபவத்தை இப்பதிவில் பின்னூட்டலாம்

நல்ல ஐடியா!

பேரூந்துகளில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் Footboard தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்க முடியவில்லை. "ஏய் பொறம்போக்கு மேலே வா" என்று அன்பாகச் சொன்னாலும் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதிலிருக்கும் த்ரில் வேறெதிலும் இல்லை. தமிழக அரசும் என்னென்னவோ செய்து பார்த்து கடைசியில் சோதனை அடிப்படையில் படத்திலுள்ளவாறு பேரூந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது.



முன்னாள் மாணவன்: அப்படியே அந்தக் கைப்பிடியையும் எடுத்துவிடால் நல்லது:-)

டி.ராஜேந்தரை என்ன சொல்லித் திட்டியிருப்பார்கள்?


சி்ன்னசேலம் ரயில் நிலையத்தில் மனைவி உஷாவை ரயிலில் அனுப்புவதற்காக சென்றபோது லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தரை திட்டி மிரட்டிய தேமுதிகவைச் சேர்ந்த 6பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷாவை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தார்.


இதற்காக சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு அவர் வந்தார்.பிளாட்பாரத்தில் நடந்து போன போது, திடீரென அங்கு வந்த சின்னசேலம் தேமுதிக ஒன்றியச் செயலாளர் சின்னசாமி, குமார், கோபிநாத், சூரியன், தாமோதரன், அறிவழகன் உள்ளிட்டோர் சரமாரியாக ராஜேந்தரைத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜேந்தர் சின்னசேலம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்போது, குப்புசாமி மகன் சின்னசாமி, சின்னசேலம் பாண்டியன் மகன் குமார், சின்னப்பன் மகன் கோபிநாத், துரைசாமி மகன் சூரியன், அங்கமுத்து மகன் தாமோதரன், கோவிந்தன் மகன் அறிவழகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.