Friday, December 31, 2010

HAPPY NEW YEAR 2011

                    இந்த வருடத்தில் எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் "JUST LIKE THAT,IT HAPPENS" அப்படின்னு கடக்க எனக்கு எல்லா விதத்திலும் உதவிய,எனக்கு பிடித்த நண்பர்களை பற்றிய பதிவு. இதே மாதிரி இன்னும் எத்தனை வருடம் வேணாலும்  என்கூட  இருப்பாங்கன்னு எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. இது கவுன்ட் டௌன் கிடையாது.  எல்லாத்தையும் பத்தி எழுதலாம்னு ஒரு நினைப்பு. இப்ப தான் அதுக்கு நேரம் வந்து இருக்கு.

என் பால்ய கால நண்பர்கள்:
இடமிருந்து வலம் : சிராஜ்,பரணி,சரவணன்,பரணி,யுவராஜ்,மோகன்,அப்பு                                                             

                         இந்த செட்டுக்கு ஐயா தான் கேங் லீடர்.  எல்லாரும் என்னை விட சின்ன பசங்க. எப்ப என்ன பிரச்சனை வந்தாலும் கொஞ்சம் கூட அதை பெருசு பண்ணாம அப்படியே அந்த பிரச்சனை கால்லையே  விழுந்து, அதுல இருந்து  ஜகா வாங்கிடுவாங்க. இப்ப அவங்க எல்லாம் படிக்கிறதுல [சாரி ப்பா தப்பா நினைச்சுகாதீங்க] பிஸி ஆ இருப்பதினால் வாரத்துக்கு ஒரு டைம் தான் பார்பேன். நடுவுல எதாவது பசங்க காலேஜ் கட் அடிட்சாங்கன்னா, மறக்காம என்னையும்  கூட சேர்த்திகுவாங்க. அப்படியே நாமளும் அன்னைக்கு மட்டும் காலேஜ் பையன் மாதிரி ஜாலி ஆ  இவனுக கூட சுத்திட்டு  இருப்பேன்.
                         எப்ப என்ன வேலைன்னாலும் வந்து முன்னாடி நிப்பானுங்க.அப்படி என்ன பெரிய வேலைன்னா "நான் என் காதலியை பார்த்து சைட் அடிக்க போகும் போது, அவளுக்காக காத்திருக்கும் வேளைகளில் வந்து எவ்ளோ நேரம் வேணாலும் வெயிட் பண்ணுவாங்க. பதிலுக்கு பெருசா ஒன்னும் செய்ய வேண்டியதில்லை. திருப்பி அவங்க ஆளுகள பார்க்கும் போது கூட போகணும்.
                        இப்ப எல்லோரடா நட்பு வட்டமும் பெருகியதில் இருந்து, அப்டியே முன்ன இருந்தா நெருக்கம் போய்டுச்சு, ஆனாலும் நட்பு மட்டும், பத்து  ரூபா இருந்தா கொடு டா தம் அடிக்கணும்க்ரதுல இருந்து பஸ் ஸ்டாண்ட்ல ஒரு பிகர் பார்த்தேன் மச்சிங்கறது வரைக்கும், பகிர்தல் இன்னும் அப்படியே தான் இருக்கு..ஒரு ஒருத்தனையும் பத்தியும் நிறைய எழுதுறதுக்கு இருந்தாலும், இன்னொரு நாள் எழுதுறேன். நன்றி பசங்களா, இந்த வருசமும் உங்க கூட  எனக்கு ரொம்ப நல்லா தான் இருந்தது. கண்டிப்பா நம்புறேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்ன்னு.....! 

என் அலுவலக சகாக்கள் மற்றும் எங்கள் பிக் பாஸ் 


நான்,கிரி,சதீஷ்,சுபாஷ்,தினகரன்,வெங்கட்,கார்த்திக்
(சிவப்பா [கலர்ல]இருக்கிறவங்க தான் எங்க பாஸ்)

                                                                            
                           நான் எவ்ளோ நாள் வேலைக்கு லீவ் போட்டாலும், என் வேலையும் சேர்த்தி பார்க்குற என் நண்பன் கிரி [என்னோட காலேஜ் கிளாஸ்மேட் தான்], என்ன தான் நான் வேலையில தப்பு பண்ணினாலும், என்னை விட்டு கொடுக்காத எங்க டீம் லீடர் சுபாஷ்[என்னோட காலேஜ் கிளாஸ்மேட் தான்], எங்க எல்லாத்தையும் CLIENT கிட்ட விட்டு கொடுக்காத எங்க பாஸ்,பாசமா  அண்ணா ன்னு கூப்பிடுரதுக்கு மூணு தம்பிக,
நான் வேலை பார்க்குற இடமும்,ரொம்ப நல்லா இருக்கும். ஒரு நாளும் வேலையில் டென்ஷன் ஆனதே இல்ல. [நீங்க சொல்றது கேக்குது வேலை செஞ்சா தான அது எல்லாம் வரும்]. ஒரு ஒருத்தரயும்  பத்தியும் நிறைய எழுதுறதுக்கு இருந்தாலும், இன்னொரு நாள் எழுதுறேன்.Thanks Guys இந்த வருசமும் உங்க கூட  எனக்கு ரொம்ப நல்லா தான் இருந்தது. கண்டிப்பா நம்புறேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்ன்னு.....! 

என் உடன் பிறவா சகோதரர்கள் பற்றி:


மதன், ஜூடு, பிரகாஷ், தியாகு

                              இதுல இருக்கிறவங்க எல்லாம் என்னை விட பெரியவங்க. நானும் எல்லாத்தையும் ரொம்ப மரியாதையா யோவ் பெருசுன்னு தான் கூப்பிடுவேன். நிறையா "நல்ல" விசயங்களை இவங்க கிட்ட இருந்து தான் பழகினேன். என்னோட பொருளாதார பற்றாக்குறைகளுக்கு எப்ப எவ்ளோ வேணாலும் உதவி பண்ணுவாங்க. எனக்கு சில சமயம் கோவம், கஷ்டம் வந்ததுன்னா, இவங்க கூட பேசி எல்லாத்தையும் அவங்க கிட்ட கொடுத்து விட்டு நான் நிம்மதி ஆகிடுவேன். அவங்களும் என்கிட்ட சின்ன பையன்னு எல்லாம் நினைக்காம எல்லா விசயத்தையும் ஷேர் பண்ணிக்குவாங்க..
ரொம்ப நல்ல அண்ணணுக...! ஒரு ஒருத்தரயும்  பத்தியும் நிறைய எழுதுறதுக்கு இருந்தாலும், இன்னொரு நாள் எழுதுறேன்.Thanks Guys இந்த வருசமும் உங்க கூட  எனக்கு ரொம்ப நல்லா தான் இருந்தது. கண்டிப்பா நம்புறேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்ன்னு.....!

எனது பேனா தோழி - கவினா

pen_pal.jpg

                                   இவங்கள பார்த்து தான் நான் வலைபூ ஆரம்பிச்சேன். ஒரு வருசத்துக்கு முன்னாடி நான் [ எழுதின ]போட்ட மொக்கைல இருந்து இப்ப இந்த மொக்கை வரைக்கும் சலிக்காம படித்து விட்டு நல்லா இருக்கு டா ன்னு கமெண்ட் போடுற ஆளு.  இப்ப வரைக்கும் அவங்கள நான் பார்த்தது இல்ல. இனிமேலும் ஐடியா இல்ல. இந்த நட்பு ரொம்பவே நல்லா இருக்கு. இந்த வருசமும் உங்க கூட  எனக்கு ரொம்ப நல்லா தான் இருந்தது. கண்டிப்பா நம்புறேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்ன்னு.....!

என் குடும்பம்:

                இது போலவே என் அப்பா,அம்மா, அண்ணன்,அண்ணன் பையன் எல்லோருமே என்கிட்ட நட்பா தான் இருப்பாங்க. யாருமே அவங்க போஸ்டிங் தகுந்த மாதிரி என்கிட்ட நடந்துக்க மாட்டாங்க. எங்க அப்பா "ஜாகிங் இவ்ளோ நாள் போகிற இல்ல" எத்தனை பிகர்அ  கரெக்ட் பண்றேன்னு கேக்குற ஆளு. உன் ஆள்ட நான் வேணா வந்து பேசட்டுமானு எங்க அம்மா கேப்பாங்க. அவ்ளோ பாசம். மம்மி,டாடி யே இப்படின்னா அண்ணனை பத்தி கேக்கவே வேண்டாம். ஆள் செம ஜாலி. ஆனா அப்பப்போ மொக்கை தான் போடுவான்.. சாரி போட்டோ தான் இல்ல. இன்னொரு நாள் காமிக்கிறேன்.

என் காதல்
love6.jpg&t=1
                        இந்த விசயத்தில மட்டும் தான் எனக்கு எழுதிக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் பெருசா நடக்கல. ஒரு வேளை இதிலயும் நான் ஜெயிச்சு இருந்தா, மேல சொன்ன அத்தனை மனிதர்கள் என் மேல வச்சு இருக்கிற பாசத்தை நான் மதிக்காம போய் இருக்கலாம், எல்லாம் நன்மைக்கே ன்னு இந்த விசயத்தையும் எடுத்துகிட்டேன்.

Happy_New_Year_2011_Wallpapers1.jpg

எழுதுறதுக்கு இன்னும் நிறைய பேரு இருக்கீங்க. மறந்து எழுதாமல் விட்ட நண்பர்கள் மன்னிக்கவும்.ஆனா எனக்கு கை வலிக்குது டைப் பண்ணி. என் இனிய அனைத்து நண்பகல் மற்றும் தோழிக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்........................................! HAVE A GREAT YEAR 2011 .........!


டிஸ்கி: என் முதல் தம் அடிச்சு பழகினது என் பால்ய கால நண்பர்களோடு.!
              என் தொழில் பற்றிய அனுபவங்களை பழகியது என் அலுவலக நண்பர்களோடு .!
              என் வாழ்க்கை பற்றிய அனுபவங்களை பழகி கொண்டு இருப்பது என் அண்ணன்களோடு.!
              நான் வலைபூ ஆரம்பிச்சு எழுத பழகி ஒரு வருஷம் ஆச்சு. அதான் உங்கள வச்சு எழுதி பழகிக்குறேன்.........!     

Thursday, December 23, 2010

அனுபவ குறிப்புகள் - 3

மிட்டாய்க்காகவோ அல்லது பொம்மைக்காகவோ 
அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளையோ,
அவர்களை சமாதானபடுத்தும் அல்லது
அடிக்கும் பெற்றோர்களையோ , 

ரெட்டை சடையுடனும்,பையில் புத்தகத்துடனும்,
சைக்கிள் தள்ளி, வெட்க பார்வை வீசி
பள்ளி செல்லும்
பண்ணிரண்டாப்பு பிள்ளைகளையோ ............!

காதில் ஹெட்போன்,கையில் செல்போன்களுடனும் ,
குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே
கல்லூரி செல்லும்
சுடிதார்களையோ ...........!

வள் பார்த்துவிட்டால் என்று
சரக்கடிக்கும் நண்பர்களையோ,
இந்த பொண்ணுகளே இப்படி தான் என்று
சரக்கடிக்கும் நண்பர்களையோ.......!

காலையில் நடைபழகி,ஹிந்து படித்து   
மனைவியின் காலுக்கு தைலம் தடவி,
செவ்வாய்,வெள்ளிகளில் கோவில் செல்லும்,
ஓய்வு பெற்ற வயதான தம்பதிகளையோ.........!மார்கழி மாத குளிர், நவம்பர் மாத மழை,
மழைநேர வானவில், கோடை வெப்பம்,
ஆடிமாத காற்று, போன்ற
இயற்கை கொடைகளை அனுபவிக்கும் போதோ  ........!

" குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா "
பாடும் குருட்டு பிச்சைகாரனை பார்க்கும் போதோ 
பொட்டல் காட்டின் நடுவே ஒற்றை பனைமரம்,
தண்ணியே இல்லாத குளங்களின் மணல் வெடிப்புகளையோ............!

ன்னும் நிறைய மனிதர்களையோ அல்லது
இயற்கை காட்சிகளையோ  பார்க்கும் போது
கவிதைக்கான கரு கிடைத்துவிடும் எனக்கு
கவிதை தான் கிடைக்காது எனக்கு ....................?

டிஸ்கி 1:  "கவிதை எழுத தெரியாதுங்கறத எப்படி எல்லாம் சொல்லுது பாரு இது" போன்ற பின்னுட்டங்கள் தடை செய்யப்படும் என அறிவிக்கபடுகிறது.
டிஸ்கி 2 : உங்களுக்கும் இந்த மாதிரியான நான் எழுதாமல் விட்ட "இனிமையான தருணங்கள்" எதாவது இருந்தால் பின்னுட்டத்தில்  தெரிவிக்கவும்.