Thursday, May 27, 2010

ஓஷோ ஜோக்ஸ்

ஒஷோவிடமிருந்து நான் தெரிந்து கொள்வது என்பது புன்னகையோடு எதிர்கொள்ளப்படும் ஒரு மரணமென்பது நம் அறுபதாண்டுகால வாழ்க்கையைவிட அர்த்தச்செறிவுள்ளது. இனி ஓஷோ ஜோக்ஸ்

1.கடலில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனை தாய் கண்டிக்கிறாள்..

“ ஏய் சனியனே! உங்கிட்ட எத்தனை தடவ சொல்றது கடல்ல விளையாடக்கூடாதுன்னு”

’ஏம்மா’

”கடல் அலை உன்னைக் கொண்டுப்போயிரும்”

”அப்பா மட்டும் விளையாடுறார்”

”அவரு ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி வச்சிருக்கிறார்”


2.பிரிவுத்துயரில் வாடும் தன் காதலிக்கு காதலன் எழுதும் கடிதம்.

அன்பே பிரிவைப் பற்றி கவலைகொள்ளாதே.இது தற்காலிகமானது.இந்த உலகமே நம்மை எதிர்த்தாலும் சரி. அந்த வானமே இடிந்து விழுந்தாலும் சரி.அந்த கடலைகளே கரைதாண்டி வந்தாலும் சரி,நீயும் நானும் இணைவதை யாராலும் தடுக்க இயலாது.எவ்வளவு இடரையும் எதிர்த்து உன்னைக் கரம் பிடிப்பேன்.இது நம் தூய்மையான உறுதியான காதலின் மீது ஆணை.

இப்படிக்கு ஆயிரம் முத்தங்களுடன் உன் அன்புக்காதலன்.

பின் குறிப்பு : வரும் வெள்ளியன்று இடி,மின்னல்,மழை வராமல் இருந்தால் நிச்சயம் உன்னைச்சந்திக்கிறேன்.

3. பாதிரியார்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆசிரியர் :

”மாணவர்களே சுவர்க்கத்தைப் பற்றி நீங்கள் பிரசங்கிக்கும்போது உங்கள் முகம் பிரகாசமாக இருக்கட்டும்.உங்கள் கண்களானது நிறைந்த ஒளி கொள்ளட்டும்.உங்கள் குரல் மென்மையாக தெளிவாக ஒலிக்கட்டும். உங்களின் வார்த்தைகள் இனிக்கட்டும்.உங்கள் புன்னகைகள் மலர்ந்து மனம் வீசட்டும்.”

அப்போது திடீரென்று ஒரு மாணவன் எழுந்து “ நரகத்தைப் பற்றி பேசும்போது, என்ன செய்வது?”

ஆசிரியர், ”நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம்.இப்படியே உங்கள் முகம் சாதாரணமாகயிருந்தால் போதுமானது”.

Tuesday, May 25, 2010

ஜோதிகா மாதிரி பெண்களை காதலிக்க வைக்க



ஒன்சென்காந்தள்,ஆம்பல்
அனிச்சம்,தன்கையகுவளை
குறிச்சி,வெட்சி
செங்கோடுவேரி,தேமா
மணிட்சிகை,உரிதுநூறு
அவிழ்தொத்து,உந்தூள்
கூவிளம்,வடவனம்
வாகை,வான்புங்குடசம்
எறிவை,செறிவை
மணிப்பூங்கறுவிளை,பயணி
வாணி,பல்லினற்குரவம்
பசும்பிடி,வகுளம்
பல் இணர்காயா,விரிமலர்
ஆவிரை,வேரல்
தூறல்,குறிஇப்பூளை
குறுனருங்கண்ணி,குருகிலை
மருதம் விரிப்பூங்  கோங்கம்
போங்கம்,திலகம்
தேங்கமழபாதிரி,செருத்தி
அதிரல்,பெருந்தன்சன்பகம்
கரந்தை,குழலி
கடிகமல்கலிமா,தில்லை
பாலை,கல் கவர் முல்லை
குல்லை,பிடவம்
சிறுமாரோடம், வாழை
வள்ளி, நீள்நறுநெய்தல்
தாளை,தடவம்
முள் தட் தாமரை,ஞாழல்
மெளவல்,நறுந்தன் கொகுடி
சேடல், செம்மல்
சிறுசெங்குரளி,கோடல்
கைதை, கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி, மணிக்குழை
கல்கமல் நெய்தல், பாங்கர்
பரா அம், பல்பூந்தணக்கம்
ஈங்கை, இலவம்
தூங்கு இணர் கொன்றை, அரும்பு
அமராத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம்
பல்பூம்பின்றி, வஞ்சி
பித்திகம்,சிந்துவாரம்
தும்பை, துழாய்
சுடர்பூந்தோன்றி, நந்தி
நரவம், நறும்புன்னாகம்
பாரம் ,பீரம்
பைங்குருங்கத்தி, ஆரம்
காழ்வை, கடிகரும்புன்னை
நரந்தகம், நாகம்
நள்ளிருள்நாறி, மா இருந்குருத்தூம்
வேங்கையும்.

இதுல 99 பூக்கள் பெயர் இருக்கு.உங்க ஜோதிகா கிட்ட மனப்பாடம் பண்ணி சொன்னிங்க அப்படின்னா ஜோதிகா செட் ஆகிடும்.

Monday, May 24, 2010

'நகை' காதல்




துணிக்கடை நகைக்கடை 
இவை இரண்டை தவிர 
எல்லா இடங்களிலும் 
என்னவள்
என்னை காதலுடன் நோக்குகிறாள்.

Wednesday, May 19, 2010

FAMILY FIRST
எங்கள் அனைவருக்கும் முதலில் சிறிது ஏமாற்றமாக தான் இருந்தது.+2 தேர்வு முடிவுகள் வெளியான அன்று காலை 10 மணி சிறப்பு செய்திகளில் பாண்டியன் என்ற மாணவன் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற செய்தியை பார்த்ததும். ஆமாம் எல்லோரும் முதல் ஆளா வர்ரதுங்குறது நடைமுறைக்கு சாத்தியம் இல்ல தான்.என்  தம்பி கெளதம்[எனது இரண்டவாது பெரியம்மாவின் இரண்டாவது பிள்ளையின் மூத்த மகன் கெளதம் [சுருக்கமா அக்கா பையன்]]ஒரு 300 கிலோமீட்டர் தூரம் என்றாலும் (கோவில்பட்டி,மதுரைக்கு அருகில்) எனக்கு நெருக்கமானவர்கள் தான்.] பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தான்.    

கெளதம் செல்வகுமார்  
OAAAAGWc60FOFPQJ1WORv271HY0T2POdP1tZkITkfUG7QIY4WmKqVd5OJ2j_-zEZl94y7sZv3oJnUwXSleb6gUx3bfkAm1T1UMXSyrBpDP0h31KIzLzgQHqGGwWR.jpg       
மதிப்பெண் பட்டியல்
OAAAAMRV0Kxc5lURm4LEcgV5kVu_uJzCiz9O4G1SSyf9KP5_a765nYJ2LnO0JeBv9dEuwjT0WVfKJvglbUtL6Ru66kYAm1T1UJZ2lGSwI76Wnvl3tP5NS7kClJkV.jpg
b.gif
ரைட் கிளிக் செய்து view image பார்க்கவும் .                             

பாண்டியனின் மதிப்பெண்ணில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்றாலும் கௌதமிடமிருந்து நாங்கள் நிறைய எதிர்பார்த்தோம்.அந்த ஏமாற்றமும் சிறிது நேரத்தில் காணமல் போனது. எனது தம்பி  கெளதம் தேர்வு முடிவை பார்த்ததும். ஏன் எனில் அவனும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரன் ஆகி இருந்தான்.கடந்த நூறு ஆண்டு கால குடும்ப வரலாற்றில்,இதுவரை +2  தேர்வு எழுதிய 76  அன்பு [அந்த 76 இல் நானும் ஒருத்தனுங்க] சொந்தங்களையும் பின்னுக்கு தள்ளி +2 தேர்வில் 1122 மதிப்பெண்கள் பெற்று குடும்பதிலயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளான்.என்ன டா இவ்ளோ 76 பேரா +2 முடிசுருக்காங்கன்னு நினைக்காதீங்க.ஒரு 50 பேர் +2 வரைக்கும் படிக்கல. ஒரு 30 பேர் +2 எழுதுறதுக்கு தயாரா இருக்காங்க.கொஞ்சம் பெரிய குடும்பம் அவ்ளோ தான்.ஆமா அம்மாவுக்கு மொத்தம் ஏழு அக்கா,ஒரு அண்ணன்,இரண்டு தம்பி. ஆக மொத்தம் பெரியம்மா பசங்க,பொண்ணுக [அக்கா,அண்ணணுக], அது போக அவங்க பசங்க,பொண்ணுகன்னு கூட்டி,கழிச்சு பாருங்க.[கலைஞர் கிட்ட தனி மாநில கோரிக்கை வைக்கலாம்ன்னு இருக்கோம்.]கணக்கு சரியா வரும்.ஆக இது கூட ஒரு மிக பெரிய சாதனை தான்.
                                தம்பியின் இந்த சாதனையை மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.தம்பியின் ஆவல் படி அவனின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துவது அன்பில்  அண்ணன் சரவணன.


டிஸ்கி : தினத்தந்தி,தினமலர்,சன் டிவி யில் தோன்றுவதை விட என் வலைப்பூவில் போட்டோ வருவது தான் பெருசு என்று இப்போது தான் L k g இல் சேர்ந்திருக்கும் எங்கள் ஆதித்யா +2 வில் மாநிலத்தில் முதல் மாணவனாக வருவேன் என்று சபதம் எடுத்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, May 4, 2010

எனக்கு பிடிச்ச கதை

 

சேட்டைக்காரன்

நான் ஆசையாய் மறுபடி ஒருமுறை கண்ணாடியில் என்மீசையைப் பார்த்துவிட்டு - மழிக்கத் துவங்கினேன்.

இத்தனை அழகான மீசையை எதற்கு எடுக்கிறாய் என்று கேட்கிறீர்கள் தானே?

அந்த விபரம் கூறுமுன் - என்னைப் பற்றிக் கொஞ்சம்...

சார்லி. சிறுவயதில் முதல் மகனாய் என்னைப் பெற்ற உடன் இறந்துவிட்ட அம்மா, நான் கல்லூரியில் படிக்கும்போதே கிராமத்தில் இறந்த அப்பா... இதெல்லாம் உங்களுக்கு போரடிக்கும்.

நான் கல்லூரிப்படிப்பு முடிந்து எத்தனையோ இண்டர்வ்யூக்களுக்குப் போயும் வேலை கிடைக்கவில்லை என்றுதான் தொழிலதிபர் கார்வண்ணனைச் சந்திக்க முடிவெடுத்தேன். வெளியே அவர் அந்தத் தொழில் செய்கிறார், இந்தத் தொழில் செய்கிறார் என்று பெயர் கொஞ்சம் ரிப்பேரானவர்தான் என்றாலும் அவரிடம் சென்று என் நிலையை எடுத்துக் கூறினால் அவருக்கிருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் ஏதாவதொரு வேலை தருவாரென்ற நம்பிக்கையில் நேற்று அவர் பங்களாவிற்குப் போனேன்.

வாட்ச்மேன், தோட்டக்காரனுடன் சமையல்காரியைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருக்க டபாய்த்துவிட்டு உட்புகுந்தேன்.

வேலை கேட்பது போல பவ்யமாய்ப் போனால் மதிப்பிருக்காதென்பதால், நான்கைந்து பேர் அமர்ந்திருக்கும் பெரிய போர்டிகோவில் நின்று கொண்டிருந்த வீட்டு வேலைக்காரன் ஒருவனிடம் ‘சார் இருக்காரா?’ என்று கேட்டேன்.

யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாகவும், அவர் வெளியே வந்தபிறகு பார்க்கலாமென்று அவன் சொல்லவே, சும்மா அந்தக் கட்டத்தில் உலாவினேன்.

அப்போதுதான் - ஒரு அறையின் கொஞ்சமாய்த் திறந்த ஜன்னலூடே அந்த சம்பாஷணை கேட்டது.

“மிஸ்டர் கார்வண்ணன்.. இது எட்டு லட்ச ரூபாய் விவகாரம். நாளைக்கு கோல்டன் ஹார்வெஸ்டுக்கு யாரை அனுப்பறீங்க?”

“நீங்க கவலையே படாதீங்க பெரிய நாயகம். நான் காலைல எட்டு மணிக்கு மணிமாறனை அனுப்பறேன். கழுத்துல நங்கூரம் டிசைன் செஞ்ச தங்க செய்ன் போட்டிருப்பான். மீசை இருக்காது. அதுவுமில்லாம நாந்தான் சொன்னேனே... ஆள் வந்த உடனே ‘வெல்கம்’ ன்னு நீங்க சொல்லுங்க. அவன் உடனே வேறெதுவும் சொல்லாம ‘யெஸ் வி கேன்’ன்னு சொல்லுவான். அதான் நமக்குள்ள கோடிங். வழக்கம்போல ரூம் நம்பர் நூத்தி ஒண்ணுதானே.. பணத்தை குடுங்க. சரக்கு அடுத்த நாளே வந்து சேரும்”

-அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை நான். நங்கூர டாலருடன் செய்ன் ரெடி பண்ண வேண்டுமே!

புரிந்ததல்லவா என் திட்டம்? வேலையத் தேடி வேட்டைக்காரனாக இருப்பதை விட, ஒரே நாள் சேட்டைக்காரனாகி எட்டு லட்சத்தை கைப்படுத்த முடிவெடுத்தேன். இரவோடிரவாக செய்ன் ரெடி செய்துவிட்டேன். இதோ காலை ஏழு மணி. மீசையையும் எடுத்தாயிற்று. அவன் எட்டு மணிக்குத்தானே போவான்.. கொஞ்சம் முந்திச் சென்று எட்டு லட்சத்தை லபக்கி வரலாமென்று புறப்பட்டேன்.

***

ஹோட்டல் கோல்டன் ஹார்வெஸ்ட் பணக்காரத் திமிருடன் இருந்தது. ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் இருந்த நூற்றி ஒன்றைத் தேடிப் போய்த் தட்டினேன்.

கதவு திறந்து ‘வெல்கம்’ என்றார் அந்த யாரோ.

உடனே ஞாபகமாய் ‘யெஸ் வி கேன்’ என்றேன்.

“நீதான் மணிமாறனா? கார்வண்ணனோட ரைட் ஹாண்ட்?”

“யெஸ்” பந்தாவாய் சொல்லியபடி நங்கூர டிசைன் செய்னை காஷுவாலாக எடுத்து டீ ஷர்டின் வெளியே விட்டேன். ‘இந்தா எட்டு லட்சம்’ என்று பெட்டியைத் தருவாரென எதிர்பார்த்தேன்.

ஆனால் அவரோ-




“யுவார் அண்டர் அரெஸ்ட்” என்றார் சினிமா க்ளைமாக்ஸ் போல.

திடுக்கிடலோடு ஓட நினைத்துத் திரும்பினேன்.

போட்டிருந்த காக்கி உடைக்கு விசுவாசமாய் கறுப்பு ராட்சஷனை கையிலேந்தி இருவர் நின்றிருந்தனர்.

***

“சொல்லுடா.. எங்களுக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் நீ ஏழு கொலை பண்ணிருக்க... அது போக கார்வண்ணனோட சேர்ந்து வேற என்னென்ன சமூக விரோதம்லாம் செஞ்சிருக்க?”

என்னைப் பிடித்த அதிகாரி பின்மண்டையில் தட்டியவாறே கேட்டுக் கொண்டிருக்க, எதிரிலிருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி விளக்கம் கொடுத்தார்... “நேத்து எங்களுக்குக் கிடைச்ச நியூஸ்படி நாங்க அவசரமா நைட்டே கார்வண்ணனை வீட்டுல வெச்சு விசாரிக்கற விதத்துல விசாரிச்சுட்டோம். ஏழு கொலையையும் உன் மூலமா அவர் செஞ்சதை இன்னைக்கு அதிகாலைலதான் ஒப்புகிட்டார். கடைசியா அவர் சொன்னது நீ இன்னைக்கு இந்த ஹோட்டலுக்கு வர்ற விஷயம் பத்தித்தான். அதுனாலதானே உன்னைப் பிடிக்க முடிஞ்சது?”

நான் ஈனமான குரலில் கதறினேன்..

“நான் கார்வண்ணனைப் பார்க்கணும். இல்லைன்னா நீங்களே அவர்கிட்ட என்னைக் கூட்டீட்டுப் போங்க. ‘இவன்தான் மணிமாறனா?’ன்னு கேளுங்க” என் குரல் உடைந்திருந்தது.

“ஏண்டா.. அவர்தான் ஜீப்லேர்ந்து குதிச்சு லாரில அடிபட்டு இறந்துட்டாரே.. டாரே என்ன இறந்துட்டானே.. அவன என்ன கூப்டறது? நீ சொல்டா நாயே..”

அவர் அடித்த அடியில் என் டீ ஷர்ட் சிவப்பானது.

ஸார்.. நீங்களாவது சொல்லுங்க சார் நான் மணிமாறனில்லை, சார்லீன்னு....


கதையை எழுதியவர் : பரிசல்காரன் [http://www.parisalkaaran.com/2009/12/blog-post_23.html]