Tuesday, September 28, 2010

Genius Tamil Student

இந்த மாதிரி எல்லாம் பதில் எழுதுறதுக்கு நம்ம பையன் எப்படி எல்லாம் யோசிச்சு இருப்பான். அப்பா நினைக்கவே பிரம்மாண்டமா இருக்கு. நிச்சயமா இவன் தமிழ் மாணவர்கள் சமுதயாதிற்க்கே பெருமை ஏற்படுத்தி உள்ளான்.எப்புடி சிங்கம் ல. இவன் காலேஜ் போயி இன்னும் என்னல்லாம் பண்ண போறானோ......?

படங்கள் : தினகரன்.எங்க பாஸ்,அதுக்காக அந்த பையன் அவரான்னு கேக்க கூடாது.அட நம்புங்கப்பா நீங்களே கீழ பாருங்க

 இவங்கள பார்த்த இந்த மாதிரி எழுதுறவங்க மாதிரியா இருக்கு.........!

Tuesday, September 14, 2010

உலக நாயகனின் கவிதை

மனித வணக்கம்


தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீக சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ, என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடிப் போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்ச‌மங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண செளகர்யமே, வாழ்!

மகளே. ஓ மகளே!
நீயும் என் காதலியே
எந்தம்மை போல..
எனைப்பிரி ந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை
காதலித்த கணவனுக்குள் எனைத்
தேடுவாயா?

நண்பா, ஓ நண‌பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உன‌தம்மணத்தின் விளம்பரங்கள்
மதமென்றும் குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகிவிடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சக‌வாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து,
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்,
ஆம்.
நாளை உன் வரியில்
நான் தெரிவேன்.

-கமல் ஹாசன்

நன்றி: விகடன் தீபாவளி மலர் - 2003

Monday, September 13, 2010

மத நல்லிணக்கம் [ட்விட்டியது]

இன்று முதல் கட்டிங் அடிப்பதை நிறுத்தி விட்டு ஷேவிங்[ஸ்] பண்ணலாம்ன்னு இருக்கேன்..! #போதையில் சொன்னது.

அரசு தொடக்க பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் பாதணி அணிவதில்லை.,தனியார் பள்ளி குழந்தைகள்........? #பாதசாரியின் பார்வை.

ரம்ஜான் விருந்து பீப் பிரியாணியில் பிள்ளையார் எறும்பு #மத நல்லிணக்கம்.!

பலரின் நிம்மதியை கெடுத்த வார்த்தைகள். "மச்சி அவ உன்ன பார்க்குறாடா" #அனுபவம் 

ஒரு வேளை என் காதலை ஆங்கிலத்தில் சொல்லாமல் தமிழில் சொல்லி இருந்தால் சம்மதித்திருப்பாளோ? #பீலிங்

விளம்பர,அறிவிப்பு பலகையில் 'ல'கர பிழைகளை காணும் போது உங்களுக்கும் கோவம் வருமா? நம்ம கண்ணுக்கு மட்டும் ஏன் இது தட்டுபடுதுன்னு..! #கேள்வி

லைட்டா அரிக்குது.... சொறிஞ்சுக்கிறேன்...... #உண்மையான ட்விட்டர் அக்கவுண்ட் ஹோல்டர்....

தோல்வி என்று ஒன்றுமே இல்லை.. தள்ளிப்போடப்பட்ட வெற்றி தான் அது. # தத்துவம்

இந்த மாதிரி ஒரு அம்மா இல்லையேன்னு யாரை பார்த்தும் நான் ஏங்கியதில்லை.இந்த மாதிரி ஒரு பிள்ளை இல்லையேன்னு எங்க அம்மாவும் ஏங்கியதில்லை#சீரியல்

காலே இல்லாம பேலன்ஸ் பண்ணுவேன்., பேலன்ஸ் இல்லாம கால் பண்ணுவேன்.,பெப்சி உமாவுக்கே போன் போட்டு மாஸ் பண்ணுவேன் டா #வ குவாட்டர் கட்டிங்

விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா செய்த விளம்பரம் செம ஹிட் .

Friday, September 10, 2010

அனுபவக் குறிப்பு

அழும் குழந்தையும் நானும் 
சில சமயம் மளிகை கடைகளில்,
சில்லறை  தட்டுப்பாடு
காரணமாக கிடைக்கும்
ஐம்பது பைசா மிட்டாய்களை,
எங்காவது தெருவோரங்களில்
எதற்காகவோ, காரணமே இல்லாமல்
அழும் குழந்தைக்கு
கொடுக்க நினைப்பேன்.


1874253879_cf2e15d475.jpg

அதற்குள்  எனக்குள் இருக்கும்
குழந்தை அழுது விடுவதால்
அதற்கே கொடுத்து விடுவேன்..!
சிறிது நேரத்தில் அழும்
அக்குழந்தைகளை  காணும் போது,
அழுகைக்கான காரணத்தை புரிந்தவனாய்,
அங்கிருந்து நகர்வேன்
கணிப்பொறியை நோக்கி
அனுபவக் குறிப்பு
டைப்புவதற்க்கு........!

வழக்கம் போல இப்பவே சொல்லிட்டேன் இது கவிதை கிடையாது.

Tuesday, September 7, 2010

கன்னி [TEEN - AGE] கவிதை

நினைவுகளால் ஆன என் நாட்குறிப்பு
வெறும் காகிதமாகிறது.........

உணர்வுகளால் ஆன என் இதயம்
வெறும் உறுப்பாகிறது...........

lonely-man.jpg

தாஜ்மாகலாய் தோன்றிய நம் பேருந்து நிறுத்தம்
வெறும் பேருந்து நிறுத்தம் ஆகிறது........

ஏனென்றால்

என்னவள் இல்லை.........?


ஆமா
ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்க. அவள பார்க்க முடியாதில்லை அல்லவா.!

என்னோட 15 வயசுல எழுதின முதல் கவிதை.

கோடை விடுமுறையில் தலைவியின் பிரிவை தாங்க முடியாமல் தலைவன் (அது  நான்தானுங்க) எழுதியது. பள்ளி விடுமுறை முடிந்து அவளிடம் இதை காண்பித்தேன்.அதுக்கு அவ சொன்னா "இது எங்கயோ குடும்ப மலர்ல படிச்ச மாதிரியே இருக்குன்னு". அப்ப இருந்து இப்ப வரைக்கும் கவிதை எழுதுறது இல்ல .....................................................................  அவளுக்கு..!

பின் குறிப்பு: பேச்சாளர்களின் முதல் பேச்சை கன்னி பேச்சு என்பார்கள். அதை போல தான் எனது முதல் கவிதையும் கன்னி கவிதை. எப்புடி..?