Monday, December 28, 2009

மூக்கும் பாதமும்

சும்மா இணையத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது சுவாரசியமான இந்த விடயம்கிடைத்தது . இதை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளலாமென்று நினைக்கிறேன் .

இரண்டு சிறிய பரிசோதனைகள்.

1. எமது உடம்பிலே ஒரு கரண்டியை தொங்கவிடக்கொடிய ஒரே பாகம்மூக்குதானாம்.

ஒரு கரண்டியை எடுத்துக்கொள்ளுங்கள் . மூக்கிலுள்ள எண்ணைத்தன்மையைநன்றாக துடைத்துவிடுங்கள். கரண்டியின் உள் பக்கம் அதாவது எதையாவதுஅள்ளும் பக்கம் , நன்றாக வாயினால் காற்றை ஊதுங்கள்.
இப்போது கரண்டியை மூக்கில் ஒட்டிவிடுங்கள் . கரண்டி உங்கள் மூக்கில்தொங்கிக்கொண்டிருக்கும்.

இதை நான் பரிசோதிக்கவில்லை யாராவது சொதித்துபார்த்து விட்டுபின்னூட்டமிடவும் .

2. இது எமது பாதம் சம்பந்தப்பட்டது.

உங்கள் வலது காலை சற்று உயர்த்தி பாதத்தை வலது புறமாக சுழற்றுங்கள் . அதாவது மணிக்கூடு சுற்றும் பக்கம் .
இப்போது அதே நேரத்தில் பாதத்தை சுற்றிக்கொண்டே உங்கள் வலது கையால்இலக்கம் ஆறினை காற்றிலே எழுதுங்கள்.
ஹா ஹா ஹா ......... உங்களால் முடியாது உங்கள் பாதமும் சேர்ந்து மற்றப்பக்கம்சுழல ஆரம்பிக்கும் .

ஆனால் இடதுகையால் ஆறு எழுதலாம்.

இன்னும் எவ்வளவு இருக்கோ

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!