Tuesday, January 19, 2010

ஆல் மச்சான்ஸ் அலர்ட்!

மின்னுறதெல்லாம் பொன்னல்ல… பண்ணுறதெல்லாம் லவ் இல்ல!
                                        Cats In Love
மாட்டிருச்சு ஃபிகருன்னு மயக்க பிஸ்கட் சாப்பிட்டு அலையாத. ‘நாங்க காதல்ல ஜெயிச்சு, வாழ்க்கையிலயும் ஜெயிச்சுக் காட்றோம்!’னு ‘பாய்ஸ்’ சித்தார்த் ஜெனிலியா மாதிரி டயலாக் விட்டா போதுமா? மொதல்ல லவ்ல ரீல் எது? ரியல் எதுன்னு தெரிஞ்சுக்கோ… உண்மையைப் படிச்சுப் புரிஞ்சுக்கோ!உஷாரா இருக்கணும்கிறதுதான் முதல் படி. ஒரு பார்வைக்கே, ஒன்பது பல்டி அடிக்கிறதை நிறுத்து. லேசா ஃபிகரு தலையைச் சாய்ச்சுப் பார்த்தா, பாஸாகிட்டோம்னு டூயட்டுக்குக் கிளம்பிராத. போற போக்குல ஒரு லுக் விட்டதுக்கே, ஆரார் வாசிக்க ஏ.ஆரைத் தேடுற பாரு… அங்கதான் ஆரம்பிக்குது அல்வா வரலாறு. அவ பார்க்கும்போது, லேசா புருவத்தை டான்ஸ் ஆட விட்டுட்டாள்னா, போச்சு… காதல்னே கன்ஃபார்ம் பண்ணிருவல்ல… வேணாம்டா. ஏன்னா, பொண்ணுங்க பார்வைங்கிறது புயல் பூமியில ஹெலிகாப்டர்ல சாப்பாடுப் பொட்டலம் போடுற மாதிரி. வாழ்க்கைக்குத் தேறாது! எடுத்ததுக்கெல்லாம் பன்ச் டயலாக் அடிக்கிறானா அவன்? ஒரு வாரத்துலயே ‘நீ இல்லைன்னா, நான் செத்துருவேன்’ங்கிறது, ‘எப்போ உன்னைப் பார்த்தேனோ, அப்பவே உன்னோட வாழ ஆரம்பிச்சுட்டேன், நமக்கு இப்போ ஒரு குட்டிப் பாப்பா இருக்கு தெரியுமா?’ங்கிறவனையெல்லாம் நம்பவே கூடாது. எடுத்ததுமே, சம் டெக்ஸ்ட் மிஸ்ஸிங்னு எட்டுத்துண்டா மெசேஜ் அனுப்பறது, ‘இதான் நீ… இதான் நான்!’னு முத்தம் குடுக்குற முயல் குட்டிங்க பிக்சர் மெசேஜ் அனுப்புற எமோஷனல் பார்ட்டிகளைக் கொஞ்சம் வெயிட்டிங்லயே வெச்சிருக்கிறது நல்லது!சினிமா கிறுக்குல ஃபீலிங் ஃபிலிம் காட்றவங்ககிட்ட அலர்ட்டா இருக்கணும். ‘அலை பாயுதே’ பார்த்த அன்னிக்கே, ‘வா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்!’னு துப்பட்டாவைப் பிடிச்சு இழுப்பான். ‘7 ஜி’ பார்த்துட்டு, ‘ஒரு தடவை உன்னை எனக்கு முழுசா தந்துடுறியா?’ன்னு கேட்பான். ‘கற்றது தமிழ்’ பார்த்துட்டு, ‘நிஜமாத்தான் சொல்றியா?’னு திரியுற பில்ட்அப் ஃபீலர்களை நல்லா வாட்ச் பண்ணியே ஆகணும்!
எப்போ பார்த்தாலும், ‘இப்போதான் கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். பிரசாதம் எடுத்துக்க. உனக்கு கோல்ட் சரியாகணும்னு வேண்டிக்கிட்டேன். காலையில அம்மாவுக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ணேம்ப்பா. இட்லி எடுத்தப்போ கை சுட்ருச்சு. தாத்தாவுக்கு பவர் செக் பண்ணி கிளாஸ் வாங்கிட்டுப் போகணும்ப்பா. தம்பியை நினைச்சா கவலையா இருக்கு. அன்னிக்கு வீட்டுக்கு வந்தான். ஒரே சிகரெட் ஸ்மெல். மூணாறுல இருந்து எங்க ஆன்ட்டி வந்திருக்காங்க. நைட் அவங்களுக்கு கீதை படிச்சுக் காமிச்சுட்டு இருந்தேனா. ரொம்ப லேட் ஆகிடுச்சு’ன்னு மானாவாரியா ஓவர் டோஸ் ஹோம்லி ஷோ ஓட்டினா, நம்பிடாத. அதுக்கு ஒரு பயங்கரமான ‘பாட்ஷா’ முகமும் இருக்கும். எங்கேயாவது பர்த் டே பார்ட்டியில ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து, உன் ஆளு தம்மைப் போட்டு டான்ஸ் பண்றதைப் பார்த்தா தெரியும்டி!
பக்கத்துல நீ இருக்கும்போது, பர்ஸைத் திறந்து நாலஞ்சு கிரெடிட் கார்டுகளைச் சும்மாவே எடுத்து வெறிச்சு வெறிச்சுப் பார்ப்பான். (அம்புட்டும் கேன்சலானதா இருக்கும்). கொஞ்சம் தள்ளி நின்னு சத்தமா, ‘உன் ஃபீல் புரியுது திவ்யா. பட்… எனக்கு வரலியே. அதுவா தோணணும். நமக்குன்னு ஒருத்தி இவதான்னு தோணணும். இதுவரைக்கும் தோணலிலயே!’னு மொபைல்ல பேசுவான் (அந்தப் பக்கம் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கிற போன் ஃப்ரெண்ட் கொலை வெறி டென்ஷன் ஆவான்). ஓட்டலுக்கு அழைச்சுட்டுப் போய், ‘எனக்கு வரப்போற ஒய்ஃபுக்காக ஒரு பீச் ஹவுஸ் கட்டணும். ரெண்டு பேரும் ஈவினிங் பீச்ல கை கோத்து நடக்கணும். குட்டியா ஒரு கார். மாசத்துக்கு ஒரு அவுட்டிங். பிறக்கப் போற குழந்தைக்கு, அவங்க தாத்தா பாட்டியோட பேரு. இப்படி எனக்கும் ஆசைகள் இருக்கு!’ன்னு உன் கண்ணைப் பார்த்துக்கிட்டே நான்ஸ்டாப்பா ஃபீல் பண்றானா? அந்த ட்ரீமிங் தலையனுங்க சகவாசமே வேணாம்!
‘ப்ராமிஸா இனி தண்ணியே அடிக்க மாட்டேன். உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு பூஜா!’ன்னு தண்ணி அடிச்சுட்டு போன் பண்ணுறானா? பக்கத்துல நீ இருக்கும்போது, எதிர்க்க கலர் கலரா ஃபிகர்ஸ் வந்தா, யு டர்ன் போட்டு மரத்தை வெறிக்கிறானா? கிராஸ் பண்ணும்போது, சிகரெட்டைக் கீழே போட்டு மிதிச்சுட்டு, ‘ச்சே இந்த சனியனை இனிமே பிடிக்கவே கூடாது’னு சத்தமாச் சொல்றானா? ‘ஸாரி, நேத்து ஜுவாலஜி கிளாஸ்ல தலைவலிக்குதுன்னு தூங்கிட்டேன். நோட்ஸ் தர முடியுமா?’னு ஏதாச்சும் கேட்கிறானா? பஸ்ல டிக்கெட் பாஸிங்குக்கு எகிறி எகிறி ஹெல்ப் பண்றது, கூட நடக்கும்போது, பிச்சைக்காரருக்கு டென் ருபீஸ் போடுறது, வயசானவங்களைத் தரதரன்னு இழுத்து ரோடு கிராஸ் பண்ணிவிடுறதுனு சமூக சேவை பில்ட்அப்பா கொடுக்கிறானா? இதெல்லாம் இவன் ரொம்ப நல்லவனா இருப்பான் போல இருக்கே என நம்பவைக்க பையன் போடுற காதல் டிராமா. கவனமா இருக்கணும் கண்ணு!

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!