Thursday, December 23, 2010

அனுபவ குறிப்புகள் - 3

மிட்டாய்க்காகவோ அல்லது பொம்மைக்காகவோ 
அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளையோ,
அவர்களை சமாதானபடுத்தும் அல்லது
அடிக்கும் பெற்றோர்களையோ , 

ரெட்டை சடையுடனும்,பையில் புத்தகத்துடனும்,
சைக்கிள் தள்ளி, வெட்க பார்வை வீசி
பள்ளி செல்லும்
பண்ணிரண்டாப்பு பிள்ளைகளையோ ............!

காதில் ஹெட்போன்,கையில் செல்போன்களுடனும் ,
குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே
கல்லூரி செல்லும்
சுடிதார்களையோ ...........!

வள் பார்த்துவிட்டால் என்று
சரக்கடிக்கும் நண்பர்களையோ,
இந்த பொண்ணுகளே இப்படி தான் என்று
சரக்கடிக்கும் நண்பர்களையோ.......!

காலையில் நடைபழகி,ஹிந்து படித்து   
மனைவியின் காலுக்கு தைலம் தடவி,
செவ்வாய்,வெள்ளிகளில் கோவில் செல்லும்,
ஓய்வு பெற்ற வயதான தம்பதிகளையோ.........!



மார்கழி மாத குளிர், நவம்பர் மாத மழை,
மழைநேர வானவில், கோடை வெப்பம்,
ஆடிமாத காற்று, போன்ற
இயற்கை கொடைகளை அனுபவிக்கும் போதோ  ........!

" குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா "
பாடும் குருட்டு பிச்சைகாரனை பார்க்கும் போதோ 
பொட்டல் காட்டின் நடுவே ஒற்றை பனைமரம்,
தண்ணியே இல்லாத குளங்களின் மணல் வெடிப்புகளையோ............!

ன்னும் நிறைய மனிதர்களையோ அல்லது
இயற்கை காட்சிகளையோ  பார்க்கும் போது
கவிதைக்கான கரு கிடைத்துவிடும் எனக்கு
கவிதை தான் கிடைக்காது எனக்கு ....................?

டிஸ்கி 1:  "கவிதை எழுத தெரியாதுங்கறத எப்படி எல்லாம் சொல்லுது பாரு இது" போன்ற பின்னுட்டங்கள் தடை செய்யப்படும் என அறிவிக்கபடுகிறது.
டிஸ்கி 2 : உங்களுக்கும் இந்த மாதிரியான நான் எழுதாமல் விட்ட "இனிமையான தருணங்கள்" எதாவது இருந்தால் பின்னுட்டத்தில்  தெரிவிக்கவும்.




5 comments:

  1. "கவிதை எழுத தெரியாதுங்கறத எப்படி எல்லாம் சொல்லுது பாரு இது"

    ReplyDelete
  2. //" குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா "
    பாடும் குருட்டு பிச்சைகாரனை பார்க்கும் போதோ
    பொட்டல் காட்டின் நடுவே ஒற்றை பனைமரம்,
    தண்ணியே இல்லாத குளங்களின் மணல் வெடிப்புகளையோ............! //

    அருமை...

    ரொம்ப நல்ல முயற்சி சரவணா.... :))) தொடரட்டும்....

    ReplyDelete
  3. //Sathiyama Mudiyala Thambi

    எனக்கும் எழுத முடியறது இல்ல அண்ணா

    ReplyDelete

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!