Wednesday, January 20, 2010

வாழ்க நற்றமிழர் . . .


user posted image
துணிக் கடைத் திறப்பு விழா. . .!
சிறப்பு விருந்தினர்
துணியே இல்லாத நடிகை !
திறப்பு விழா என்பதால்
அவர் வருகை திறந்த நெஞ்சோடு . . .
ஆராவது மூடு விழா
அழையுங்களேன் . . .!
இவர்கள் பேட்டி
மடைதிறந்த்துபோல் – இல்லை எனினும்
உடை திறந்த்துபோல் நிச்சயம் இருக்கும்.!
திறப்பு விழாவின் போது
ரிப்பன் வெட்டிய நடிகை கேட்டார்.
‘ரிப்பன் என்குத்தானே . . .!’
உங்களுக்குத்தான் மேம் !
நாளை உடை தைக்க
உபயோகப் படும் !
அன்று சாலையில் இயற்கை மாற்றம்.
புது ந்தி ஒன்று பிரவகித்த்து,
ஜொள் ந்தி . . .
வாழ்க ஜொள்ளர்கள் !
என்ன கூட்டம்
என ஒதுக்க வந்த டிராபிக் போலீஸ்
இரண்டாம் உயிர் எழுத்தை வாயில் திறக்க
நாலாம் உயிர் எழுத்து உள்ளே போய்ப் பறந்தது.!
நடுநாயகமாய் குத்துவிளக்கு. . .!
இலக்குமியைத் தீண்டிப் பழகியது அது
என்ன பாவம் செய்த்தோ இன்று,
உயிர் இருந்தால் தன்னைத்தானே
குத்திக் கொண்டிருக்கும். . .
அதனால்தான் குத்து விளக்கா ?
பேசாமல்
நடிகை வீட்டு நாயையும்
சட்டை அணிவித்து
திறப்பு விழாவுக்குக் கூப்பிட்டிருக்கலாம் . . .!
அதாவது கொஞ்சம் நாணப் பட்டிருக்கும்.
நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம். . .!
நடிகைக்கு வேண்டுமாம் என
ஏன் சொல்லாது விட்டாய் பாரதீ . . .?
அந்தக் கூட்டத்தில் நல்லா டிரஸ் பண்ணி
போர்த்திக் கொண்டு வெட்கப் பட்ட சீவன்கள்
துணிக்கடைப் பொம்மைகள் மட்டுமே . . .!
திறந்த மனசோடு எல்லோர்க்கும்
திவ்ய தரிசனம்.
பேருந்துகள் கூட அன்று அங்கே நின்றே சென்றன.
user posted image
பேயாட பிசாசாட – நடன நிகழ்ச்சியில்
வாராவாரம் இரசித்த்து 2D – தரிசனம்.
இது 3 D – ஜென்ம சாபல்யம் !
மேம்மிடம் நிறையப்பேர் கைஎழுத்து வாங்கினர்.
சிலர் நெஞ்சில், சிலர் உள்ளங் கையில்,
சிலர் ரூபாய் நோட்டுக்களில் . . .
இவர்கள் கொஞ்சநாள் குளிக்க மாட்டார்கள்,
கழுவ மாட்டார்கள். . .
நாளை அந்த ரூபாய் நோட்டு
நல்ல ரேட்டுக்கு ஏராளமாய் ஏலம் போகும் . . .!
மேம்க்கு ரெம்ப ஆசை
தன் இரசிகர்கள்
தனக்குக் கோவில் கட்ட வேணும் என்று . . .
கோவிலில் கற்சிற்பம் இருக்கும்
அதை உறுதி செய்ய
நிறையப் பேர் மேம்மைத்
தொட்டு எல்லாம் பார்த்து
பிறவிப் பயனை அடைந்தார்கள் . . .!
அந்தக் காலத்தில் ஏதாவது மா நாய்க வணிகன்
பூம்புகாரில் உள்ள நாளங்காடிக் கடையைத்
தாசி அபரஞ்சியை வைத்துத்
திறந்திருப்பார் . . .!
இன்று இங்கே இவர்கள் இப்படி !
மனிதர்கள் மாறவே இல்லை !
நீதான் ஸாரதி ஆயிற்றே !
ஏ, வங்கக் கடல் கடைந்த மாதவா, கேசவா . . .!
இவர்களைப் பத்திக் கொண்டு போ கடல் வரை !
அங்கே தள்ளி மந்தார மலையைத் தூக்கி
அமுக்கி ஒரு கடை கடை !
இனியேனும் இப்படிஎல்லாம் திறவார் ஒரு கடை ! !

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!